தமிழகத்தில் இன்று
டெல்லி:
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் பொதுவேலை நிறுத்தத்தில் 55 தொழிற்சங்கங்கள், 6 வணிகநிறுவனங்கள், முக்கிய எதிர்க் கட்சிகள்பங்கேற்கின்றன.
மேலும் இந்த வேலை நிறுத்தத்தால் ரயில், பஸ், விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடுமுழுவதிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வணிக நிறுவனச் சங்கத் தலைவரான மதுகர் பாண்டே கூறுகையில், இந்தப் பொதுவேலை நிறுத்தத்தில் 20மில்லியன் மக்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் பாண்டே இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேலைநிறுத்தத்திற்கு முழு அளவில் ஆதரவு உள்ளது. வங்கி, இன்ஸ்யூரன்ஸ், டெலிகாம் நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு முழு அளவில் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தத்திற்கு காபி உற்பத்தித் தொழிலாளர்கள்,டெக்ஸ்டைல், கைத்தறித்தொழிலாளர்கள், சிகரெட் தொழிலாளர்கள், முழு அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளம்:
இந்த பொது வேலை நிறுத்தத்தால் மேற்கு வங்காளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் பந்த் முழு அமைதியுடன் நடந்து வருகிறது.
பஸ் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே சாலைகளில் ஒரு சில லாரிகள்ஓடின.
சமையல் கியாஸ் விலை உயர்வு, மானியக்குறைப்பு, உரவிலை அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்த்தும் மத்திய அரசின்புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் துரைசாமி ராஜா கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலனிற்காகஎதுவும் செய்யவில்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் விவசாயிகள் சிலசமயங்கள் தற்கொலை செய்யும்அளவிற்குப் போய்விடுகிறார்கள். இதையெல்லாம் கண்டித்துத்தான் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறதுஎன்றார்.
பாண்டிச்சேரி:
நாடுதழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு பாண்டிச்சேரியில் முழு ஆதரவு உள்ளது. மத்திய அரசின் புதியபொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும், பாரதிய ஜனதாக் கட்சியின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும்நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடைகள், வியாபார ஸ்தலங்கள் இயங்கவில்லை. தமிழ்நாடு அரசு பஸ்கள் இரண்டு, மூன்று தவிர பாண்டிச்சேரியில்பஸ்போக்குவரத்து இல்லை. சாலைகளில் பஸ்கள், ஆட்டோரிக்ஷாக்கள், லாரிகள், இரண்டு சக்கர வாகனங்கள்எதுவும் ஓடவில்லை.
வங்கிகள் எதுவும் திறக்கப்படவில்லை. வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாதவாறு பலர் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைக்கு பாதகம் ஏற்படாதவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் நிலவரம்:
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் அசாமில் அரசு அலுவல்கள் பாதிக்கப்பட்டன. எந்த அரசு அலுவலகங்களிலும்ஊழியர்கள் வரவில்லை. வங்கிகள் திறக்கப்படவேயில்லை. சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் இந்த வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பஸ், ரெயில் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சாலைகளில் காலை முதல் பஸ்கள் எதுவும்ஓடவில்லை. இதுவரை எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications