மலைக்க வைக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள்
டெல்லி:
மேட்ச் பிக்சிங் குறித்து சிபிஐ இரண்டாம் கட்ட விசாரணை நடத்தயிருப்பதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
மேட்ச் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய வீரர்களுக்குத் தொடர்பிருக்கிருதா? அவர்களது சொத்து மதிப்பின் அளவு என்ன ? என்று சிபிஐ விசாரணைநடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சிபிஐயையே மலைக்க வைக்கும் அளவுக்கு அவர்களிடம் சொத்துக்கள் இருந்தன என்று தெரிய வந்துள்ளது.
அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ரூ 10 கோடிக்கும் குறையாமல் சொத்து உள்ளது. ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால்இந்தக் கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கு இல்லாமல் இருக்கலாம் என்று பிரபல நாளிதழ் ஏசியன் ஏஜில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ 200 கோடியைத் தாண்டும். அதனால் அவருக்கும் இந்த மேட்ச் பிக்சிங்கில்தொடர்பு இருக்கலாம் என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் தன்னுடையபல்வேறு தொழில்களில் பணமுதலீடு செய்துள்ளார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேட்ச் பிக்சிங் குறித்துத் தகவல்கள் தெரிய ஆரம்பித்தவுடனே சிபிஐயினர் தங்களது வேட்டையைத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தற்போதைய கிரிக்கெட்வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரின் சொத்து விபரங்கள் குறித்தும் கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்திப்படி இந்த வழக்கு குறித்தும், இதற்குத் தொடர்புடைய இந்திய வீரர்கள் குறித்தும் விரைவில் விசாரணைநடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் கூறினார்.
சிபிஐ இதுகுறித்து ஏற்கனவே பல்வேறு கிரிக்கெட் வீரர்களிடம் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரணை நடத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும்விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக அப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 1998 ம் ஆண்டும் அதற்குப் பின் கடந்த ஆண்டு நடந்தகிரிக்கெட் போட்டிகளிலும் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறியதாக பத்திரிக்கைச் செய்தியில்கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் , ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications