தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
யாழ்பாணத்தை புலிகள் நெருங்கினர்

கொழும்பு:

யாழ்பாணத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது.

யாழ்பாணத்தை எப்படியும் பிடித்தே தீருவது என்பதில் விடுதலைப் புலிகள் மிகத் தீவிரமாக உள்ளனர்.

வெள்ளிக்கிழமை யாழ்பாணத்தில் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே தெடார்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் புலிகள் சிறிது சிறிதாக யாழ்பாணத்தை நோக்கி முன்னேறிவிட்டனர்.

லண்டனிலிருந்து புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்பாணத்தை நாங்கள் நெருங்கிவிட்டோம். எந்தநேரத்திலும் யாழ்பாணத்துக்குள் நுழைந்து விடுவோம். யாழ்பணத்தில் உள்ள ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல்நடக்கும். எனவே, பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றுபுலிகளின் அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே லண்டன் வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர் கூறுகையில்,யாழ்பாணத்தில் இலங்கை ராணுவம் பின் தங்கியுள்ளதை ஒப்புக் கொண்டுளளார். அவர் கூறுகையில், யானைஇறவு, ராணுவத் தளங்களை விடுதலைப் புலிகளிடம் ராணுவம் இழந்தது மிகப் பெரிய அடியாகும்.

புலிகளை வெல்ல இந்திய ராணுவத்தின் உதவியை கோரவில்லை. ஆனால். பிற உதவிகளை இந்தியா செய்யும்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடத்தயார் என அறிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும்இந்தியாவிடமிருந்து வரவில்லை. அப்படி அதிகாரப்பூர்வமாக வந்தால் அது குறித்து ஆலோசிப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+