தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
படகுகள் மூலம் இந்தியவில் நுழைய முயன்ற 39 பாகிஸ்தானியர்கள் கைது
ஜாம்நகர்:(குஜராத்)
குஜராத் மாநிலத்திற்கு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு படகுகளை இந்தியக் கடற்படையினர் கைப்பற்றினர்.
அந்தப் படகில் 39 பாகிஸ்தானியர்கள் அங்கிருந்து படகு மூலம் பயணம் செய்து இந்தியாவிற்குள் நுழைய முற்பட்ட போது இந்தியக் கடற்படையினர்அவர்களைக் கண்டுபிடித்தனர்.
குஜராத் மாநிலத்தில் ஓகா துறைமுகத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த படகுகள் வருவதைக் கண்டுபிடித்த இந்தியக் கடற்படை அதிகாரிகள் அந்த இரண்டுபடகுகளையும் சுற்றி வளைத்தனர்.
அதில் பயணம் செய்த 39 பாகிஸ்தானியர்களும் ஓகா போலீஸ்நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
இதே போல் கடந்த வருடமும் ஓகா துறைமுகத்தில் 21 பாகிஸ்தானியர்கள் வந்ததாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யூ.என்.ஐ.












Click it and Unblock the Notifications