தமிழகத்தில் இன்று
ஹரித்வார்:
விரைவாக சென்று கொண்டிருந்த காரின் மீது வழிப்பறிக் கொள்ளையர்கள் பாறாங்கற்களை எறிந்ததில் முன்சீட்டில் டிரைவர் அருகே உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்த தொழிலதிபர் இறந்தார்.
ஷியாம் ரஷ்தோகி (வயது 55) என்பவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் ஹரித்வார் சென்றுவிட்டு மாருதிகாரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். டிரைவர் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். ரஸ்தோகி பின் சீட்டில்உட்கார்ந்திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் முஸாபர்நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது சிலகொள்ளையர்கள் காரை வழிமறிக்க முயன்றனர். இதையடுத்து டிரைவர் காரை மிக வேகமாக ஓட்டினார்.
ஆனால், கொள்ளையர்கள் காரின் மீது பெரிய கற்களை எறிந்தனர். இதில் ஒரு பாறாங்கல் ரஸ்தோகியின் மார்பில்வந்து விழுந்தது. இதில் அவர் மயக்கமடைந்தார். இதையும் மீறி டிரைவர் காரை வேகமாக ஓட்டிக் கொண்டுசென்றுவிட்டார். 3 கி.மீ. தூரம் சென்றவுடன் தான் காரை நிறுத்தினார்.
அருகில் அமர்ந்திருந்த தனது முதலாளியைப் பார்த்தபோது மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அவரை அரசுமருத்துவமனைக்கு டிரைவர் கொண்டு சென்றார். ஆனால், மார்பில் ஏற்பட்ட பலத்த தாக்குதலால் அவர் இறந்தார்.
அன்றைய தினம் ரஸ்தோகியின் காருக்கு முன்பாக வந்த பல கார்களையும் கொள்ளையர்கள் வழி மறித்துள்ளனர்.ஆனால், யாரும் காரை நிறுத்தாமல் தப்பிவிட்டனர். இதனால் வெறுப்படைந்த கொள்ளையர்கள் அந்த வழியாகவந்த ரஸ்தோகியின காரின் மீது பாறாங்கற்களை வீசியுள்ளனர்.
டெல்லி-ஹரித்வார் நெடுஞ்சாலையில் வழிப்பறிக் கொள்ளைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications