தமிழகத்தில் இன்று
டெல்லி:
நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. வியாழக்கிழமை மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையைக்கண்டித்தும், வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதை எதிர்த்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் (பந்த்)நடந்தது.
இந்த பந்திற்கு முழு ஆதரவு இருந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் வேலைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள்யாரும் வேலைக்கு வரவில்லை.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் பஸ்கள் ஓடவில்லை. தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. ரயில்போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகளில் யாரும் வேலைக்கு வரவில்லை.
சிஐடியு தேசியச் செயலாளர் தாபான் சென் கூறுகையில், வாஜ்பாய் அரசை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், வாஜ்பாய் அரசிற்கும், அவர்களது புதிய பொருளாதாரக் கொள்கைக்கும்பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது என்பதற்கு பந்தின் முழு வெற்றியே காரணம் என்றுதெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதில் தொழிற்சங்கத்தைச்சேர்ந்த 20 மில்லியன் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 மில்லியன் மக்களேகலந்து கொண்டனர்.
நாடுதழுவிய இந்த வேலை நிறுத்தம் மிக அமைதியாக நடந்தது. எங்கேயும் மிகப்பெரிய அசம்பாவிதச்சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
மத்திய அரசின் மக்கள்விரோதப் போக்கைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த பந்த் நடந்தது. உரமானியம்,சமையல்கியாஸ் உயர்வு, ஆகியவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட இந்த பந்த் வெற்றியடைந்துள்ளது என்றுதொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கேரளாவிலும், கல்கத்தாவிலும் இயல்பு வாழ்க்கை அதிக அளவு பாதிக்கப்பட்டது. பஸ், ரயில் போக்குவரத்துக்கள்ஸ்தம்பித்தன. டெல்லியில் பாராளுமன்றம் முன்பு 100 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷம்எழுப்பினார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications