தமிழகத்தில் இன்று
டெல்லி:
மேக்கள் தொயைைக் கட்டுப்படுத்த இந்தியா தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக பிரதமர் தலைமையில் தேசியமக்கள்தொகைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியைத் தொட்டது. இதையடுத்து இந்தியா விழித்தெழுந்துள்ளது.
முன்னதாக நடந்த தேசிய மக்கள்தொகை கமிஷனின் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, அருண் செளரி மற்றும் திட்டக்கமிஷன்உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பல திட்டங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை கமிஷன் மக்கள்தொகை குறித்து வருடத்திற்கு இரண்டு முறை கூடி விவாதிக்கும்.
கூட்டம் முடிந்தபின் நிருபர்களிடம் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த் கூறுகையில், மத்திய மற்றும் மாநில அரசு ஒருங்கிணைந்துசெயல்பட்டால்தான் பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக தேசிய மக்கள்தொகை கொள்கையை அறிமுகப்படுத்தவேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.
2010 ம் ஆண்டிற்குள் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு மக்கள்தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெருகிவரும் மக்கள்தொகையினால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் அனைவரும் தங்குவதற்கே இடம் இருக்காது. இந்த நெருக்கடியைச்சமாளிப்பதற்கு அரசு கண்டிப்பாய் திட்டங்கள் பலவற்றை வகுக்கும். தேசிய மக்கள்தொகைக் கமிஷன் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்கும்.
தேசிய மக்கள்தொகை கமிஷன் தலைவராக பிரதமர் வாஜ்பாய் இருப்பார். இவ்வாறு நிருபர்களிடம் அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications