தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் மக்கள் வசிப்பிடங்கள் மீது குண்டு வீசித்தாக்குதல் நடத்தவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும்படி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் இலங்கை ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணத்தைநெருங்கிவிட்ட புலிகள், அந் நகரைப் பிடித்துவிடும் முயற்சியில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
புலிகளுடன் சண்டையிட பல்வேறு நாடுகளின் உதவியை இலங்கை ராணுவம்கேட்டுள்ள நிலையில், தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியையும்கேட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் மக்கள் வசிப்பிடங்கள் மீது விடுதலைப் புலிகள் ராக்கெட்மற்றும் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தாமல் இருக்க அவர்களைஅறிவுறுத்தவேண்டும் என்று இலங்கை ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஆர்ய ரூபசிங்கேகூறியதாவது:
யாழ்ப்பாணம் பகுதியில் மக்கள் வசிப்பிடங்களை இலக்காகக் கருதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளனமானவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாண மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை ராணுவம்மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இறுதிக் கட்ட போரைமேற்கொண்டுள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை ராணுவமும் பதில்தாக்குதல் நடத்தி வருகிறது.
இருப்பினும், மக்கள் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று புலிகளைசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தவேண்டும் என்றார் ரூபசிங்கே.
இதற்கிடையே கொழும்புத்துறை, அரியாலி, தானான்கிளப்பு, பூனேரியான் பகுதிகளில்புலிகளில் மறைவிடங்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல்நடத்தி வருகின்றன.
இதனால், யாழ் நகர் நோக்கிய புலிகளின் முன்னேற்றம் தடை பட்டுள்ளதாக ராணுவம்தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தங்கள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகபுலிகளின் செய்தி தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications