செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ஊட்டி மலர்க் கண்காட்சிக்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு
கோயம்பத்தூர்:
நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி தொடர்பாக பிரச்சினை நிலவுவதால் இந்த ஆண்டு ஊட்டியில் மலர்க் கண்காட்சியை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஊட்டியில் ஞாயிற்றுக்கிழமை, மலர்க் கண்காட்சி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டி.ஆர்.ஓ. நல்லுச்சாமி, எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில்நடந்தது.
எம்.பி. மாஸ்டர் மாதன், எம்.எல்.ஏ. குண்டன், அரசு கொறடா முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீலகிரியில் தேயிலை விவசாயிகள்,விலை வீழ்ச்சி காரணமாக பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் உணர்வை மதித்து இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என அனைத்துக்கட்சியினரும் கோரினர்.
மலர்க் கண்காட்சியை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், தேயிலை விவசாயிகள் சங்க போராட்டக் குழுத் தலைவர் உச்சி கெளடர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கொண்ட குவு மீண்டும் பிரதமர்வாஜ்பாயை சந்தித்துப் பேசி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நேற்று நீலகிரியில், பல இடங்களில் தேயிலை விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள்பாதிப்படைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கோத்தகிரியில் 2000 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை, ரப்பர், காபித் தொழிற்சாலைகள் நலிவடையாமல் பாதுகாக்கக் கோரி தென்னிந்தியத் தோட்டத்தொழிலாளர்கள் சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
கோவையில் நடந்த இச்சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலைக்கு ஆதார விலை உள்படபல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications