செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ஜெய்ப்பூர்:
தந்தை இறந்தபிறகு மைனர் குழந்தைக்குத் தாய்தான் காப்பாளர் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சந்திரகாந்தா என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு மீது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. சந்திரகாந்தா மனு விவரம்:
என்னுடைய கணவர் தவுலத் ராம் சோனி கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி இறந்துவிட்டார். எனது 7 வயது மகன் பாவன், ஜெய்ப்பூரில் உள்ளஉபாத்யாயா பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி பள்ளிக்குச் சென்ற எனது மாமனார் பன்சிலால், எனது மகனை அழைத்துச்சென்றுவிட்டார்.
அன்றிலிருந்து எனது மகனை வீட்டில் அடைத்து வைத்துக் கொண்டு என்னிடம் ஒப்படைக்க மறுக்கிறார். இது சட்டவிரோதம். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என்று மனுவில் சந்திரகாந்தா குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எல். குப்தா, ஜெ.சி. வர்மா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. சந்திரகாந்தாவின் முறையீடு நியாமாக உள்ளது.தந்தை இறந்தபிறகு, மைனர் குழந்தைக்குத் தாய்தான் உண்மையான காப்பாளர் என்ற முறையில் சந்திரகாந்தாவின் முறையீட்டை ஏற்றுக்கொள்கிறோம். குழந்தையின் தாத்தா எந்த வகையிலும் குழந்தைக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தாயை விட என்னிடமே குழந்தை பாவன் அதிக ஈடுபாடு காட்டுவதாகக் கூறுவதால் மட்டும் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. கணவர் இறக்கும்வரை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பத்தில் சந்திரகாந்தா இருந்துள்ளார்.
அதனால், தாத்தா பன்சிலாலிடம் பாவனுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அனேகமாக எல்லா கூட்டுக் குடும்பத்திலும் பெற்றோர்களை விடதாத்தா, பாட்டியிடம்தான் குழந்தைகளுக்கு அதிக ஈடுபாடு ஏற்படுவது என்பது சாதாரண விஷயம்.
இந்த வழக்கில் பன்சிலாலின் கோரிக்கையை ஏற்று அவரிடம் பாவன் வளர அனுமதிக்க முடியாது. தாயிடம் பாவன் வளர்ந்தால் பண வசதி உள்ளிட்டபிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் ஒப்புக் கொள்ளமுடியாது. சந்திரகாந்தா தற்போது தனது சகோதரருடன் வசிக்கிறார். அவர் வேலை செய்தால்வருமானம் கிடைக்கிறது.
ஆகவே, உண்மையான காப்பாளர் என்ற முறையில் தாய் சந்திரகாந்தாவிடம்தான் பாவன் வளரவேண்டும். அப்போதுதான் அவனுக்கு குடும்பநெறமுறைகளைக் கற்றுத் தருவதுடன் கல்வி மற்றும் வளர்ச்சியில் சந்திரகாந்தா அதிக அக்கறை காட்டமுடியும்.
மேலும், சந்திரகாந்தாவுக்கு வேறு நபருடன் எந்த சட்டவிரோதமான தொடர்பும் இல்லை. அவர் நல்ல மனம் மற்றும் உடல் நலத்துடன் உள்ளார்.ஆகவே, அவரிடம்தான் பாவன் வளரவேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications