மகேஷ் பூபதி----லியாண்டர் பிரிவுக்குக் காரணம் யார்?
புது தில்லி:
உலகின் முதல் நிலை இரட்டையர் டென்னிஸ் ஜோடியான லியாண்டர் பயஸ், மகேஷ்பூபதி இருவரும் பிரிந்துவிட்டனர். இந்தியா மட்டுமல்ல உலக டென்னிஸ்ரசிகர்களிடையே இது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
இந் நிலையில், எனக்கும் மகேஷ் பூபதிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதற்கு பூபதியின்பயிற்சியாளரும், முன்னாள் டென்னிஸ் வீரருமான என்ரிகோ பிபர்னோதான் காரணம்என்று இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர் லியாண்டர் பயஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, உலகில் சிறந்த 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில்இறுதியாட்டத்தில் இருவரும் விளையாடினர். இதில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச்ஓபன் போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். தற்போது உலகில் முதல்நிலை இரட்டையர் ஜோடியாக விளங்குகின்றனர்.
இருவரும் பிரிந்த நிலையில், இனி இருவரும் தனித்தனியாக விளையாடுவது என்றும்அடுத்து வரும் ஏடிபி சர்க்யூட் டென்னிஸ் போட்டிகளில் இருவரும் ஜோடி சேர்ந்துவிளையாடுவது இல்லை என்றும் முடிவு செய்துள்ளனர்.
இனி வரும் ஏடிபி டூர் டென்னிஸ் போட்டிகில் மகேஷுடன் சேர்ந்துவிளையாடமாட்டேன். ஆனால், எதிர்காலத்தில் மீண்டும் மகேஷுடன் சேர்ந்துவிளையாடுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார் பயஸ்.
எனக்கும், மகேஷுக்கும் கடந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்தது. மேலும், ஒருமோசமான ஆண்டாகவும் அமைந்துவிட்டது. எங்கள் இருவருக்கும் இடையே நிறையசம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. கடந்த ஆண்டே நாங்கள் எங்கள் கூட்டணியைமுறித்துக் கொள்ள நினைத்தோம். ஆனால், நாங்கள் எங்கள் விளையாட்டில் அதிகஈடுபாடு காட்டி ஒரு சிறந்த இரட்டையர் ஜோடியாக நிலைநிறுத்தினோம்.
எங்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதற்கு மகேஷின் பயிற்சியாளர்என்ரிகோ பிபர்னோதான். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் வென்ற பிறகு மகேஷைஅவர் மதிக்கவேயில்லை. அது தவிர, என்னுடைய பயிற்சியாளர் பாப்கார்மிக்கேலிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். எங்கள் கூட்டணிநன்றாக இருக்க அவர் எந்த வகையிலும் உதவவில்லை.
பிபர்னோவின் இது போன்ற சிறுசிறு பிரச்சினைகள்தான் பெரிதாக இப்போதுதேவையில்லாத பிரிவு ஏற்பட்டுள்ளது. பிபர்னோவை பயிற்சியாளராக வைத்துக்கொள்வது என்ற மகேஷின் முடிவுக்கு நான் மரியாதை தருகிறேன். என்னுடையசுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவே மகேஷை விட்டு பிரிந்துவிட்டேன்.
மகேஷுடன் பிபர்னோ இருக்கும்வரை, மகேஷுடன் நான் இணைந்துவிளையாடமாட்டேன். மகேஷ் இல்லாததால் நான் தற்போது ஜான் சிமெரின்க்குடன்இணைந்து விளையாடுவேன். கடந்த இரு வாரங்களாக நாங்கள் நன்றாக விளையாடிவருகிறோம். இப்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம், உலக இரட்டையர்மாஸ்டர்ஸ் போட்டிக்குத் தகுதி பெறவேண்டும் என்பதுதான். இந்த ஆண்டு முழுவதும்ஜான் சிமெரின்க்குடன் இணைந்து விளையாடுவேன்.
ஒலிம்பிக் மற்றும் டேவிஸ் கோப்பைப் போட்டிகளில் மகேஷுடன்இணைந்துவிளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் லியாண்டர் பயஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications