மேட்ச் பிக்ஸிங்: பாகிஸ்தானை காப்பாற்ற முயற்சி
லண்டன்:
பாகிஸ்தான் மீதான கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகாரை மறைக்க முயன்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயல் தலைவர் டேவிட் ரிச்சர்ட்ஸ் குறித்து"சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயல் தலைவராக இருந்த ஆரிப் அப்பாஸிக்கு இதுதொடர்பாக 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம்தேதி, ரிச்சர்ட்ஸ் அனுப்பிய பேக்ஸ் செய்தி தங்களிடம் இருப்பதாகவும் சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக், சில போட்டிகளில் தான்தோன்றித்தனமாக விளையாடுமாறு, சில ஆஸ்திரேலிய வீரர்களைக் கேட்டுக்கொண்டதாக அப்போது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்து அப்பாஸி பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து அப்பாஸிக்கு ரிச்சர்ட்ஸ் அனுப்பிய பேக்ஸ் செய்தியில், இதுபோன்ற முக்கிய விஷயங்களை பத்திரிகைகளில் விவாதிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்என்று கூறியிருந்தார். மேலும், இத்தனை வருடமாக பழகியுள்ள போதிலும், அப்பாஸி, தன்னிடம் இதுகுறித்துக் கருத்துக் கேட்டிருக்காதது வருத்தம்தருவதாகவும் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
பேக்ஸ் செய்தியில் ரிச்சர்ட்ஸ் தொடர்ந்து கூறியுள்ளதாவது:
பத்திரிகைகளில் இந்த விஷயத்தை வெளியிட்டு விட்டதால், இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இதைமறைக்க முயல்வது கடினம். இதனால் கிரிக்கெட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
பொதுப் பிரச்சினையாக இதைக் கொண்டு செல்வதற்கு முன் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். என்னிடம்விவாதித்திருக்கலாம் என்று ரிச்சர்ட்ஸ் கூறியிருந்ததாகத் தெரிகிறது.
ரஷீத் லத்தீப் புகார் புறக்கணிப்பு:
இதே போல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ரிச்சர்ட்ஸுக்கு பேக்ஸ்அனுப்பியிருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக லத்தீபுக்கு, ரிச்சர்ட்ஸ் பதிலே அனுப்பவில்லை என்றும் சன்டே டைம்ஸ் கூறியுள்ளது.
டி.வி. ஒளிபரப்பு சர்ச்சை: ரிச்சர்ட்ஸுக்கும் தொடர்பு?
இந்த நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கான டி.வி. ஒளிபரப்புக்கான உரிமை வழங்கியதுதொடர்பாக நடந்த ஊழலில் ஐ.சி.சி. தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது புகார் கூறப்பட்டது. அப்போது, டால்மியாவுக்கு ஆதரவாக ரிச்சர்ட்ஸ் பேசினார்.
இந்தப் பிரச்சினையில் ரிச்சர்ட்ஸும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டால்மியாவுடன் இணைந்து, ரிச்சர்ட்ஸும் டி.வி.ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் ஏற்பட உதவியதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications