தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
விமானப் படை நடத்திய தாக்குதலில் 400 புலிகள் பலி?

கொழும்பு:

விமானப் படை நடத்திய கடும் தாக்குதலில் 400 விடுதலைப் புலிகள் இறந்தாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

நாகர்ாகாவில், அம்பன், கோவில் கண்டி, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் புலிகள் மீது கடும் தாக்குதல்நடத்தியதாக ராணுவம் கூறியுள்ளது.

ராணுவ வீரர்கள் சுட்டு 15 விடுதலைப் புலிகள் இறந்ததாகவும் 5 பேர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. போதியபோக்குவரத்து வசதி இல்லாததால் காயமடைந்த சகாக்களை விடுதலைப் புலிகள் போர் முனையிலேயேவிட்டுவிட்டுச் செல்வதாக ராணுவம் கூறியுள்ளது.

யாழ்பாணத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள்விமானம், கப்பல்கள் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருவதாகவும் அரசு கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற