மனைவியை அடித்துத் துன்புறுத்திய கிரிக்கெட் வீரர் கைது
லக்னெள:
மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உத்திரப்பிரதேச மாநில ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டனுமான கைனேந்திரபாண்டே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது குறித்து லக்னெள மாவட்ட போலீஸ் அதிகாரி பிராஜ் பூஷண் பக்ஷி கூறியதாவது:
பாண்டே தனது மனைவியை கடந்த பல நாட்களாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மனைவியை அவர் துன்புறுத்தியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால்,பாண்டே அடித்ததால் அவரது மனைவி பிரதிபாவின் முகம், உடல் பகுதிகளில் காயமேற்பட்டுள்ளது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கணவரின் துன்புறுத்தலால் பலமுறை பிரதிபா மயக்கமுற்றுள்ளார். தனி அறையில் அடைத்து வைத்து கடுமையாகத் துன்புறுத்தியுள்ளார். பிரதிபாகொடுமைப்படுத்தப்படுவதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து பிரதிபாவின் தந்தை, தாய், சகோதரி ஆகியோர் பாண்டே வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்குஉடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த பிரதிபாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரதிபாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள பிரதிபாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகபிரதிபாவின் தந்தை, காஸிபூர் போலீஸில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் லக்னெள, இந்திரா நகரில் உள்ள வீட்டிலிருந்து கைனேந்திர பாண்டே கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பாண்டேயிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் பக்ஷி.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications