தமிழகத்தில் இன்று
மனைவி, குழந்தையை எரித்துக் கொன்று கணவரும் தற்கொலை
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, தன்னுடன் வர மறுத்த மனைவி மற்றும் மகளை கட்டடத் தொழிலாளி ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துஎரித்துக் கொன்றார். தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி அருகேயுள்ள தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (27). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி செந்திலாள் (25). இவர்களுக்குமதுமிதா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
செந்திலாளுக்கு உடல் நலம் சரியில்லாததால், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் மாமனார் வீட்டிற்குச் சென்ற சக்திவேல்,மனைவி குழந்தையை தன்னுடன் அனுப்புமாறு வற்புறுத்தினார். அப்போது கணவனுக்கும், மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மண்ணெண்ணையை எடுத்து மனைவி, குழந்தை மீது ஊற்றி தீவைத்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டார். இதில்மூவரும் கருகி இறந்தனர்.
இதுகுறித்து ஆனைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சட்டப் படிப்புக்குத் தடை: தமிழக அரசு மீது துணைவேந்தர் புகார்
கோவை:
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை அமல்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜம்மாள்தேவதாஸ் புகார் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மகளிருக்காக ஏற்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜம்மாள் தேவதாஸ்திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப் படிப்புக்கான அங்கீகாரம் பெற டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு பல்கலைக்கழகம், மற்றொரு பல்கலைக்கழகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறைகளில இல்லை. இத்தகைய முரண்பட்டகொள்கையால் அவினாசிலிங்கம் பல்கலையில் சட்டப் படிப்பை அமல்படுத்த முடியாமல் உள்ளது.
வரும் கல்வியாண்டில், பல்கலைக்கழகத்தில் எதிர்கால வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு எம்.எப்.சி, எம்.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி,இன்ஜீனியரிங் ஆகிய பட்டப் படிப்புகளை பெண்களுக்கென துவக்கவுள்ளோம். மேலும் பல புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications