தமிழகத்தில் இன்று
டெல்லி:
சியரா லியோன் நாட்டில் தீவிரவாதிகளை அடக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையில் மேலும் கூடுதல் வீரர்கள்அனுப்பட்டுள்ளனர்.
கிரெனடியர் பிரிவைச் சேர்ந்த படையினர் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் இந்தக் கூடுதல் படையில் இடம் பெற்றுள்ளனர்.திங்கள்கிழமை இந்தப் படையினர் சியரா லியோனுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தீவிரவாதிகள் பிடியில் 25 இந்தியப் படையினர் இன்னும் சிக்கியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அடுத்த ஐந்து நாட்களில் 1500 இந்தியத் துருப்புகள் சியரா லியோன் செல்லவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விமானங்களில் இந்தியப் படையினர்சியரா லியோன் செல்கின்றனர். ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த 1612 வீரர்கள் சியரா லியோனில் உள்ளனர்.
தற்போது செல்லும் கிரேனடியர்கள் பிரிவில் 800 வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர 130 கமாண்டோக்களும் செல்கின்றனர்.
தலைநகர் ஃப்ரீடவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள். அங்குள்ள இங்கிலாந்துப் படையினருடன் இணைந்து இவர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர்.
கடந்த ஆண்டு கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கிரெனடியர் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அடுத்த மாதம்தான் இவர்கள்சியரா லியோன் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதால் முன்னதாகவே இந்தியப் படையினர்அனுப்பப்பட்டுள்ளனர்.
139 பினைக் கைதிகள் விடுவிப்பு:
இதற்கிடையே, தாங்கள் பிடித்து வைத்திருந்த 139 பினைக் கைதிகளை தீவிரவாதிகள் திங்கள்கிழமை விடுவித்தனர். இவர்கள் அனைவரும் சர்வதேசராணுவப் படையினர்.
விடுவிக்கப்பட்ட அனைவரும் லைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 347 வீரர்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர்.
தீவிரவாதிகள் அமைப்புடன் நல்ல உறவு வைத்துள்ள லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் முயற்சியினால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். டெய்லர் கூறுகையில்,தீவிரவாதிகள் வசம் உள்ள மற்ற வீரர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications