For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கை, இஸ்ரேல் தூதரக உறவு புதுப்பிப்பு

நியூயார்க்:

இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே, 10 வருடங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் மீண்டும் தூதரக உறவு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளை 1970 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் முறித்துக் கொண்டன. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் போர்உக்கிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கியிருக்கும் ராணுவ வீரர்களைக் காப்பாற்ற இலங்கைக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது.இந்தியா ராணுவஉதவியை நிராகரித்து விட்டதால் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை முடிவு செய்ததது.

உறவைப் புதுப்பித்துக் கொள்வது தொடர்பாக இந்த மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாகஉறவு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதர் ஜான் டி சாரம் மற்றும் நியூயார்க் நகருக்கு வருகை தந்துள்ளஇஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி ஆகியோர் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

உறவு புதுப்பிக்கப்பட்ட பின் இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தூதரக அளவில் முதலில் உறவு ஏற்படுத்திக் கொள்ளப்படும்.படிப்படியாக பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உறவு புதுப்பிக்கப்பட்டாலும் கூட இப்போதைக்கு இரு நாடுகளும் தங்களது தூதரகத்தை அமைக்காது என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஜோர்டான்நாட்டிலுள்ள இலங்கைத் தூதர், இஸ்ரேலுக்கான தூதராகவும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் இலங்கைத் தூதராகவும் செயல்படுவார்கள் என்றுதெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X