கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: தில்லி போலீசிடம் உதவி கேட்கிறது தென் ஆப்பிரிக்கா
ஜோகனெஸ்பர்க்:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீதான விசாரணைக்கு உதவியாக, அவர் சம்பந்தப்பட்ட ஒலிநாடாவைவழங்கும்படி தில்லி போலீஸாரை தென் ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரின்போது இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் குரோனியே தொடர்பு வைத்துக் கொண்டுகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தில்லி போலீஸார் இக் குற்றச்சாட்டைக் கூறினர்.
தாங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சூதாட்டக்காரர் ஒருவருடன் குரோனியே பேசியதை அவர்கள்ஒலிநாடாவில் பதிவு செய்துள்ளனர். இக் குற்றச்சாட்டை அடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும்,அணியிலிருந்தும் குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதான இக் குற்றசாட்டு குறித்து விசாரிக்க தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் தனி விசாரணை கமிஷனை நியமித்துள்ளது.
நீதிபதி எட்வின் கிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு உதவியாக,சூதாட்டக்காரருடன் குரோனியே பேசிய ஒலிநாடாவை அளித்து உதவும்படி வெளியுறவுத் துறை மூலம் தில்லிபோலீஸாருக்கு விசாரணைக் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒலிநாடா கிடைத்தால்தான் அதில் உள்ள குரலுடன் குரோனியேவின் குரலை ஒப்பிட்டு விசாரணை நடத்தமுடியும்.ஆகவே, விசாரணைக்கு ஒலிநாடா மிகவும் முக்கியமாகத் தேவை. கோரிக்கையை தில்லி போலீஸார் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறோம் என்று விசாரணைக் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை முடித்து ஜூன் 30-ம் தேதி தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையைசமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications