அதிதியுடன் திருமணமா? - அஜய் ஜடேஜா மறுப்பு
மே 17, 2000
4. காதலோ காதல்!
கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்.
எண்ணுதலுஞ் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமுழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடியில் கோடியாய் (5)
ன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான் பட்ட பாடனைத்தம்
தாளம் படுமோ? தறிபடுமோ?யார் படுவார்?
நாளொன்று போயினது: நானு மெனதுயிரும்,(10)
நீளச்சீலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்
சாயைபோ விந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான்கூறவில்லை) மன்மதனார் விந்தையால்,(15)
புத்திமனஞ் சித்தம் புலனென் றறியாமல்,
விந்தைசெய்யுஞ சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காமண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்ற பொடுள் கண்ட நினைவில்லை. சோலையிடச் (20)
சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற்றெண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென. என்னுளத்தின்
இச்சை யிணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப ,வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் (25)
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிவரக் கொம்பையெலாம் நோக்கிவந்தேன்.
( அடுத்து குயிலும் குரங்கும்)
Back To Index


Click it and Unblock the Notifications
