தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
விருதுநகர் அருகே தப்பி ஓடிய 2 கைதிகள் சுட்டுக் கொலை

விருதுநகர்:

விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு திரும்பும் வழியில் தப்பி ஓடிய கைதிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு கைதிகள்இறந்தனர். தப்பி ஓடிய மற்ற கைதிகளில் 2 பேர் பிடிபட்டனர்.

மதுரை அருகே கல்லுப்பட்டி என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மதுரை சிறையில் இருந்து 7 கைதிகளை விருதுநிகர் நீதிமன்றத்தில் விசாரணைக்காகஆஜர்படுத்துவதற்காக போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். இந்த ஏழு கைதிகளும் பயங்கர கொள்ளையர்கள்.

நீதிமன்றத்தில் கைதிகளை ஆஜர்படுத்திய பின்னர் அவர்களை வேனில் அழைத்துக் கொண்டு போலீசார் மதுரை திரும்பினர். கல்லுப்பட்டி என்ற இடத்தில்சாப்பாட்டிற்காக வேனை நிறுத்தினர். அப்போது வேனில் இருந்த ஏழு கைதிகளும் தப்பி ஓடினர்.

அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதில் கோபால், ஈஸ்வரன் என்ற இரண்டு கைதிகள் குண்டு பாய்ந்துஇறந்தனர். மற்ற ஐந்து பேரும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் புகுந்தனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் ராஜா, பாண்டி, கருணாநிதி என்றமூவரை பிடித்தனர்.

தப்பி ஓடி விட்ட ராஜாங்கம், பசும்பொன் என்ற இருவரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+