தமிழகத்தில் இன்று
இஸ்லாமாபாத்:
நவாஸ் ஷெரீப் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோகோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வானொலியான வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் அவர் கொடுத்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்:
ஷெரீப் உள்பட கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் முஷாரப் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதன்மூலம் அரசியல்வாதிகளுடனான ராணுவ ஆட்சியின் மோதல் போக்கு முடிவுக்கு வரும்.
நாட்டில் அதிகரித்துள்ள ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலை ஒழிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முஷாரப் அரசு பேசவேண்டும். அனைத்துத் தரப்பினும் ஒருங்கிணைந்து இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். ஏற்கனவே உள்ளசட்டம் ஒருதலைப்பட்சமானது. அதை ரத்து செய்ய வேண்டும்.
நல்ல ஆட்சி நடத்த ராணுவத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை முஷாரப் தலைமையிலான அரசு தவற விட்டு விட்டது.
காஷ்மீர் விஷயத்தில் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிப்ைபடுத்தப்பட்டு விட்டது. ராணுவப் புரட்சியே இதற்குக் காரணம். அதை பாகிஸ்தானியர்கள் மனதில்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் உடன்பாடு காண இயலாவிட்டால் இரு நாட்டு எல்லைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இரு நாட்டு மக்களுக்கிடையே நம்பிக்கை, நல்லுறவை வளர்க்க வேண்டும். உருப்படியான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாதகமானசூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தீவிரவாதத்தை ஆதரித்ததாகவோ அல்லது நாட்டை பொருளாதாரச் சீரழிவுக்கு உள்ளாக்கியதாகவோ எனதுஅரசு மீது புகார் கூறப்பட்டதில்லை. ஆனால் இப்போது அதுபோன்ற புகார்கள் வருகின்றன என்றார் அவர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications