தமிழகத்தில் இன்று
பஞ்சாப்: (இந்திய-பாகிஸ்தான் எல்லை)
இந்திய ராணுவத்துக்கு உளவு சொல்லி வந்த வாலிபர் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டு இறந்தார். அவரதுஉடலை பாகிஸ்தான் இந்தியாவிடம் வழங்கியது.
சத்பல் என்ற அந்த வாலிபர் இந்திய ராணுவத்துக்கு உதவி வந்தார். கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி அவர்குருதாஸ்பூரிலிருந்து பாகிஸ்தானுக்குள் சென்றார். ஆனால், மறு நாளே பிடிபட்டார்.
பின்னர் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. சுமார் ஒரு வருடம் கழிந்த நிலையில் கடந்த ஏப்ரல் 17ம்தேதி அவர் லாகூர் மருத்துவனையில் இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ்தானிலிருந்து தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உடலை இந்தியாவுககுக் கொண்டு வர ராணுவம் முயற்சி எடுத்தது. ஒரு மாதத்துக்குப் பின்அவரது உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முன் வந்தது.
இதையடுத்து புதன்கிழமை அவரது உடல் வாக் எல்லைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்களிடம் சத்பாலின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த எல்லை முகாம் மூலமாக சிவிலியன்ஒருவரின் உடல் பாகிஸ்தானால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த சடங்குகள் நடந்த போது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரியும் அம்ரிஸ்தர் மாவட்டமாஜிஸ்திரேட்டும் உடனிருந்தனர்.
அவரது உடலை பாகிஸ்தானியர்கள் போலீஸ் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். அவரது உடலை பெற சத்பாலின்தந்தை தேஜ்பால், சகோதரர் தரம்பால் ஆகியோரும் வந்திருந்தனர். பாகிஸ்தானிய ஆம்புலன்சிலிருந்து அவரதுஉடல் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வேனில் ஏற்றப்பட்டது. பின்னர் உடலை அடையாளம்காண்பதற்காக அவரை மூடியிருந்த துணி அகற்றப்பட்டது. அப்போது மகனின் உடலைப் பார்த்த தந்தை தேஜ்பால்கதறி அழுதார்.
உடலைப் பெற்றுத் தந்ததற்காக இந்திய அதிகாரிகளுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார் அந்தத் தந்தை. சகோதரர்தரம்பால் கூறுகையில், நாட்டுக்காக என் தம்பி உயிர் இழந்திருக்கிறான். அது எங்களுக்குப் பெருமை தான்.ஆனால், அவனது மனைவி வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அரசு நிதியுதவியோஅல்லது வேலைவாய்ப்போ வழங்கி அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications