தமிழகத்தில் இன்று
புது தில்லி:
சுந்தரம் பைனான்ஸ் மற்றும் ஆப்பிள் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கார் வாங்கக் கடன் வழங்கும்கூட்டு ஒப்பந்தம் குறித்து ஃபியட் பைனான்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.
தற்போது நாட்டில் கார் வாங்க பல்வேறு நிதி நிறுவனங்கள் கடனுதவி வழங்கி வருகின்றன. இதில் சுந்தரம்,ஆப்பிள், ஃபியட் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. பியட் நிறுவனம் தனது சர்வதேச நிதிப் பிரிவானஃபிடிஸ்" மூலம் நிதி வழங்கி வருகிறது.
இத் தொழிலில் மேலும் தீவிரமாக ஈடுபடும் வகையில், சுந்தரம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் இணைந்துகூட்டு ஒப்பந்தம் மூலம் கார் வாங்கக் கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வர ஃபியட் நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
தற்போது அந் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தைஅடைந்துள்ளதாகவும் ஃபியட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஃபியட் நிறுவனத்தின் பாலியோ, சியன்னா ரகக் கார்கள் வாங்க கடன் வழங்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications