தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பி-ஜி: ஒரே வருடத்தில் ஆட்சியை இழந்த இந்-தி-யர்

டெல்லி:

தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜித் தீவின் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் பிரசாத். பதவியேற்று சரியாக ஒரு ஆண்டு கழிந்தநிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகேந்திர பிரசாத், பிரதமாரகப் பதவியேற்ற உடனேயே, அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பிஜிக் கட்சிகள் ஜனாதிபதி ரத்து சர் கமிசேசேமாராவுக்கு எழுதிய கடிதத்தில், பிஜி இனத்தவரைச் சேர்ந்தவர் பிரதமர் பதவியேற்க வகை செய்யும் விதத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றுஅவை வலியுறுத்தின. ஆனால் அக்கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட்டார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து இரு கட்சிகளும் மகேந்திர செளத்ரியின் ஆட்சியில் சேர சம்மதித்தன.

57 வயதாகும் செளத்ரியின் தொழிலாளர் கட்சி 1999ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. புதிய அரசியல் சட்டத்தின்படிஇந்தத் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 71 எம்.பி. தொகுதிகளில் 37 இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றது. சொந்த பலத்துடனேயேஆட்சியமைக்கலாம் என்ற நிலை இருந்தாலும், இனப் பிரச்சினை வரக் கூடாது என்ற நோக்கத்தில் பல இனத்தவர்கள் அடங்கிய அமைச்சரவையைசெளத்ரி அமைத்தார்.

17 பேர் கொண்ட அமைச்சரவையில் 11 பிஜி இனத்தவர்கள் இடம் பெற்றனர். இவர்களில் இரண்டு பேர் துணைப் பிரதமர்கள். தனக்கு எதிராகதேர்தலில் பிரச்சாரம் செய்த கட்சியிலிருந்து இரண்டு பேரையும் செளத்ரி அமைச்சர்களாக்கினார்.

1987-ம் ஆண்டு இந்தியர்களைக் கொண்ட அரசை, ராணுவத் தளபதி ரபுகா புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து விட்டு ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினரைப் பிரதமராகக் கொண்டு பிஜியில் ஆட்சியமைந்தது. இதை தனது பதவியேற்புவிழாவிலும் செளத்ரி குறிப்பிட்டார்.

ஹரியானா மாநிலம் பஹு ஜமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த செளத்ரியின் மூதாதையர் கடந்த நூற்றாண்டில் பிஜித் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். செளத்ரி, பிஜிபொதுச் சேவைக் கழகத்தில் சேர்ந்து பொதுச் செயலாளராக பணியாற்றினார். தீவிலுள்ள சர்க்கரைத் தொழிலாளர்களிடையே இக்கட்சிக்கு நல்லசெல்வாக்கு உள்ளது.

1987-ல் இந்திய வம்சாவளியினரை அதிமாகக் கொண்ட பிரதமர் திமோசி பவத்ராவின் ஆட்சியை ராணுவத் தளபதி ரபுகா கவிழ்த்து விட்டுஆட்சியமைத்தபோது, செளத்ரி சில காலம் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.

44 சதவீதம் மக்கள் தொகையுடைய இந்திய வம்சாவளியினருக்கும், பெரும்பான்மை மக்களாகிய பிஜி இனத்தவர்களுக்கும் இடையிலான மோதல்,தற்போது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+