தமிழகத்தில் இன்று
ஃப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.நா. சபை முடிவுசெய்துள்ளது.
நியூயார்க் நகரில் ஐ.நா. சபைக்கான மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் கூறுகையில், தற்போது சியர்ரா லியோனில் 11,100 பாதுகாப்புப் படையினர்உள்ளனர். இதை 16,500 ஆக அதிகரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இதுதொடர்பாக அறிக்கைஒன்றை அவர் சபையில் தாக்கல் செய்வார் என்றனர்.
இந்த மாத துவக்கத்தில் தீவிரவாதிகள் பிடியில் சியர்ரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுன் சிக்கியபோது, 8000 பேர் கொண்ட அமைதி காக்கும் படைஅனுப்பப்பட்டது.
அமெரிக்க தூதர் வருகை:
இதற்கிடையே, தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள 330 அமைதி காக்கும் படையினரை மீட்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கஅதிபரின் சிறப்புத் தூதராக ஜெஸ்ஸி ஜாக்சன் நைஜீரியா வந்துள்ளார்.
வியாழக்கிழமை அவர் தீவிரவாதிகள் தலைவர் போடே சங்கோ மற்றும் புரட்சிகர ஐக்கிய முன்னணி அமைப்பினருடன் ஜாக்சன் பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின் பெனின் நகரில், நைஜீரிய அதிபர் ஒலுஸெகுன் ஒபசஞ்சோவை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பாதைக்கு புரட்சிகர ஐக்கிய முன்னணி திரும்ப வேண்டும். அதற்கான அருமையான வாய்ப்பு இப்போதுகிடைத்துள்ளது என்றார்.
லைபீரிய அதிபரையும் சந்திக்க ஜாக்சன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பினைக் கைதிகளை மீட்பதில் லைபீரிய அதிபரும் தீவிர முயற்சிமேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, காயமடைந்துள்ள 40 வீரர்களை விடுவிக்க தயாராக இருப்பதாக தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். ஆனால் எப்போதுவெளியிடப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை.
1998-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சங்கோ. ஆனால் பின்னர் நடந்த அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருக்கு பொது மன்னிப்புஅளிக்கப்பட்டது.
மே மாத துவக்கத்தில் தலைநர் ஃப்ரீடவுனின் மத்தியப் பகுதியில் உள்ள மகேனி என்ற இடத்தில் திடீரென புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த 500-க்கும்மேற்பட்ட அமைதிகாக்கும் படையினரை பினைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். மே 8-ம் தேதிக்குப் பிறகு தீவிரவாதிகளின் தலைவர் சங்கோதலைமறைவாகி விட்டார். கடந்த புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். தற்போது ராணுவத்தின் பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications