For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மக-னை மே-ய-ராக்-க நாட-க-மா-டி-ன---ார் க-ரு-ணா-நி-தி: --ஜ-. பு--கார்

சென்னை:

மகனை மேயராக்க கிருஷணா நதி நீர் வந்துவிட்டதாக நாடகம் ஆடிய முதல்வர்கருணாநிதி இப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அக்கறை காட்டுவதுதென் மாவட்ட விவசாயிகளை ஏமாற்றும் செயலா-கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுபற்றி சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக மக்களைப் பற்றியோ விவசாயிகளைப் பற்றியோ சிந்திக்காமல் அடுத்ததேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் முதல்வர் கருணாநிதியின் அலட்சியத்தால்,காவிரி நதி நீர் உரிமை பறி போனது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1886ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பெரியாறுஅணை தொடர்பாக சென்னை ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் மகாராஜாஆகியோருக்கு இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால உரிமை ஒப்பந்தத்தை நிலைநாட்டுவதில் எந்த வகையிலும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.

ஆனால், பெரியாறு அணையில் 136 அடி மட்டுமே நீர் தேக்கப்படுவதால் திருபுவனம்,திருப்பத்தூர் பகுதிகளில் 38,000ஏக்கர் நிலங்களில் தரிசு நிலங்களாகமாறியிருக்கின்றன. 86,000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடியும் 53,000 ஏக்கர்நிலங்கள் வசதியின்றி ஆழ் குழாய்க் கிணறு சாகுபடிக்கு மாறியிருப்பதாகவும்அப்பகுதி விவசாயிகள் மிக கவலையோடு என்னிடம் தெரிவித்தனர்.

அணையின் நீர் மட்டம் 136 அடி அளவுக்கு குறைக்கப்பட்டதால் ஆண்டுதோறும்5,580 மில்லியன் அடி நீர் வீணாகப் போவதாகவும், இதனால் ஆண்டு தோறும் 55கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய விளை பொருட்கள் உற்பத்தி இழப்புஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பெரியாறு நீர் மின் நிலையத்தில் ஆண்டுக்கு 3 மாதம் மின் உற்பத்திசெய்ய முடியாத நிலை ஏற்படுவதால் ஆண்டுதோறும் 75கோடி ரூபாய் அளவிற்குஇழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புள்ளி விவரத்தோடு தெரிவிக்கின்றனர்.

1970ம் ஆண்டு இதே கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முல்லைப் பெரியாறுஅணையின் ஒப்பந்தம் திருத்தப்பட்டதையொட்டி பெரியாறு அணையில் கேரள அரசுபடகுப் போக்குவரத்தினை முழுவதுமாக கைப்பற்றிக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தால்நமக்கு சொந்தமான பல்வேறு உரிமைகள் பறிபோய் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள்கூறுகின்றனர்.

மத்திய நீர் வளக் கமிஷன் பரிந்துரைப்படி பெரியாறு அணையை பலப்படுத்தப்படும்பணிகள் 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டாலும்என்னுடைய ஆட்சிக் காலத்தில் 1991ம் ஆண்டு முதல் முழு அளவில் பணிகள் முடுக்கிவிடப்பட்டு 1995ம் ஆண்டு முழுவதும் முடிவடைந்துவிட்டன.

அணையின் நீர் வழிந்தோடி படிக்கட்டு கட்டும் பணிகள் 1997ம் ஆண்டு துவங்கியபோது கேரள அரசு இந்தப் பணிகளை முடக்கும் வகையில் பல்வேறு தொல்லைகளைக்கொடுத்தது. தமிழகப் பொறியாளர் ஒருவர் ஒரு நாள் முழுவதும் -சி-றை வைக்கப்பட்டசம்பவமும் நடைபெற்றது. அப்போது கூட முதலைமைச்சர் கருணாநிதியோ.பொதுப்பணித் துறை அமைச்சரோ அப்பகுதிக்கு நேரில் சென்று பிரச்ச-னகளைகண்டறியத் தவறி விட்டனர்.

பெரியாறு அணையில் 152 அடிநீர் தேக்கப்பட்டால் அந்த நீரைப் பயன்படுத்திசிவகங்கை மாவட்டத்தில் விவசாயத்தை வளப்படுத்த முடியும் என்பதால்,என்னுடைய ஆட்சிகாலத்தில் சிவகங்கை கண்மாய் திட்டமும், மறமங்கலம் கண்மாய்த்திட்டமும் 7 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வந்தது. பணிகள்முடிவடையும் நேரத்தில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் என்னுடைய அரசுகொண்டு வந்த திட்டம் என்பதால் கருணாநிதி ஆட்சி காழ்ப்புணர்வோடுஇத்திட்டங்களை நிறுத்தி விட்டது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முதலமைச்சர் கருணாநிதி,காவிரிப் பிரச்சனையில் தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லியில்அமர்ந்து கொண்டு புதிய வரைவுத் திட்டத்தில் கையெழுத்து போட்டு காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதில் தமிழக காவிரிப் பாசன விவசாயிகளுக்குபச்சைத் துரோகத்தை இழைத்து விட்டு வந்தார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X