தமிழகத்தில் இன்று
சண்டிகர்:
பிஜியில் பிரதமர் மகேந்திர செளத்ரியை புரட்சிக்கும்பல் பிடித்துவைத்துள்ளதையடுத்து இந்தியாவில் அவரது சொந்த ஊர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
கடந்த வருடம் இதே நேரத்தில் ஹரியானாவில் உள்ள பகுமாஜல்புரா கிராமத்தில் மக்கள் அனைவரும் ஒரே கொண்டாட்டம், கும்மாளத்தில்இருந்தனர். ஏனெனில் பகுமாஜல்புரா பிஜியில் ராஜினாமா செய்த பிரதமர் செளத்ரியின் சொந்த ஊராகும். அவர் கடந்த வருடம் இதே நேரத்தில்பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரியை புரட்சிக் கும்பல் சுற்றிவளைத்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள ராணுவத்தினரை விடுவிக்க வேண்டும்.பிணைக்கைதிகளாக அடைத்து வைத்துள்ள 45 பேரை விடுவிக்க வேண்டும் அப்போதுதான் நாங்கள் ஆட்சி நடத்த விடுவோம் என்று கூறி அவரை அடித்துஉதைத்துள்ளது.
அவரோ எதற்கும் பயப்படாமல் பிஜி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள ராணுவத்தினரை பின்வாங்க வைக்க மாட்டோம் என்று டெலிவிஷனில்கூறியுள்ளர். இந்நிலையில் புரட்சிக்காரர்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள ராணுவத்தினரை வாபஸ் வாங்காவிடில் செளத்ரியைச்சுட்டுக்கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் செளத்ரியின் சொந்த ஊரான பகுமாஜல்புராவில் பொதுமக்கள் அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அங்கே என்னநடக்கிறது என்று கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பிரதமர் செளத்ரிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்றும் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே செளத்ரியின் உறவினர் முக்தா செளத்ரி ஒருவர் கூறுகையில், நாங்கள் மகேந்திர செளத்ரி பிரதமரானதும் எல்லையில்லாமகிழச்சியடைந்தோம். ஆனால் தற்போது அங்குள்ள சூழ்நிலையே முற்றிலும் மாறிவிட்டது. அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எந்த விதஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நாங்கள் மிகவும் கவலையில் இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் மக்களிடம் பொதுக்கூட்டம் நடத்தி எல்லோரும் வாஜ்பாயை நேரில் சந்தித்து பிரதமர் செளத்ரியை காப்பாற்றும்படி வேண்டுகோள்விடுப்போம். வரும் செப்டம்பரில் செளத்ரி எங்கள் ஊருக்கு வரவிருந்தார். தற்போது அவரது நிலை மிகவும் சிக்கலாக உள்ளது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications