தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் யாழ் நகருக்கு அடுத்த பெரிய நகரமான சாவகச்சேரி நகரைப் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
12 மணி நேரப் போருக்குப் பின் இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து சாவகச்சேரி நகரைத் தாங்கள் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம்தெரிவித்துள்ளது.
தென்மராச்சி பிரிவில் உள்ள நகரம் சாவகச்சேரி. முக்கிய நகரமான சாவகச்சேரி விடுதலைப் புலிகள் வசம் வந்து விட்டதால், கொடிகாமம் பகுதியில்மட்டுமே தற்போது ராணுவம் பலமுடன் உள்ளது.
இப்போரில் ராணுவத் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மதுவில், நானவில், சரசாலை ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளும் தகர்க்கப்பட்டதாக புலிகள் கூறியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும்நீடித்த சண்டை, சனிக்கிழமையும் தொடர்ந்தது.
சிறு பீரங்கிகள் மற்றும் பீரங்கிகள் மூலம் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் கமாண்டோ படையினர் தாக்குதல் நடத்தியதாக புலிகள் அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை மாலைக்கு மேல் கொடிகாமம் நோக்கி இலங்கை ராணுவத்தினர் பின் வாங்கிச் செல்வதாகவும் அப்பகுதியிலும் கடும் சண்டைநடப்பதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications