தமிழகத்தில் இன்று
சென்னை:
காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டெல்லியிலிருந்துசனிக்கிழமை இரவு சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், இலங்கை ராணுவத் தளபதிஇந்தியாவிற்கு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினீர்கள் என்று செய்தி வெளியிடப்பட்டிக்கிறதே என்றுநிருபர்கள் கேட்டனர்.
அதற்கு கருணாநிதி, பிரதமரிடம் இலங்கையைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. காவிரிப் பிரச்சினைக்காக ஒதுக்கப்பட்ட நேரம் மீதம் இருந்தது. அதைப்பயன்படுத்திக் கொண்டு பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் திட்டக் குழு மூலமாகவும், நிதி அமைச்சர் மூலமாகவும் தமிழ்நாட்டின்தேவைகளை எல்லாம் எடுத்துரைத்தேன்.
கேள்வி: காவிரிப் பிரச்சினையால் கர்நாடக முதல்வர் சில கருத்துக்கள் கூறியிருப்பது பற்றி?.
பதில்: கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, நான் வருவேன் என்று நீங்கள் டெல்லிக்குப் புறப்பட்டிருந்தால்மன்னித்துக் கொள்ளுங்கள். என்று மிகுந்த நாகரீகமாக தன்னுடைய நிலையை விளக்கியதே தக்க சான்றாகும்.அது மாத்திரமல்ல. டெல்லியில் உள்ளகர்நாடக பவனில் இருந்து எனக்கு பூங்கொத்தும் அனுப்பி வைத்தார்.
பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெறுகின்ற நேரமாக இருப்பதாலும், தனக்கு முன் கூட்டியே போதுமான அவகாசம் தந்து தேதி குறிப்பிடாததாலும்தான்வர முடியவில்லை. விரைவில் நாம் கலந்து பேசி டெல்லியில் சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அவருக்கு ஏன் அவகாசம் தேவைப்படுகிறதுஎன்றால், காவிரி ஆணையம் அமைக்கும்போது அவர் முதல் அமைச்சராக இல்லை. படேல் இருந்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலில் நடைபெறுகின்ற கூட்டம் இது என்பதால் அதுபற்றிய விவரங்களை அவர் அறிந்து கொண்டுவருவதற்கும் இந்த அவகாசம் தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications