ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்-டி: -தீ-வி-ர பயிற்-சி எ-டுக்-கி-ற--து இந்திய அணி
புனே:
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி ஆசியக் கோப்பை ஒருநாள்கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள்பங்கேற்கின்றன.
இந்திய அணி சார்பில் 22 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் புனேயில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் தலைமையில் வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
புனேயில் மைதானத்தில் உடற்பயிற்சி மற்றும் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், அங்குள்ள தேசிய பாதுகாப்புஅகாதெமிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், தேசிய பாதுகாப்புஅகாதெமிக்கு அழைத்துச் செல்லப்பட்டது மிகுந்து ஆச்சரியத்தை அளித்தது. பயிற்சியின் இடையேபுத்துணர்ச்சிக்காக சுற்றுப் பார்ப்பதற்காக வீரர்கள் அங்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில், அகாதெமியில் வீரர்களுக்கு சிறப்பு உடற்பயிற்சியும், ஓட்டப்பந்தயப் பயிற்சியும் அளிக்கப்படலாம் என்றுகருதப்பட்டது. ஆனால், அத்தகைய பயிற்சி எதையும் வீரர்கள் மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே, பயிற்சியின்போது முகத்தில் காயம்பட்ட ராபின் சிங்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மைதானத்துக்கு வந்திருந்தபோதும் அவர் பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே,காய்ச்சல் ஏற்பட்டுள்ள அகார்கர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முழு பயிற்சியில் ஈடுபட்டார்.
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களுக்கு கபில்தேவே பந்து வீசினார். பிற்பகலில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்,விக்கெட் கீப்பிங் போன்ற துறைகளில் சில முக்கிய குறிப்புகளை வீரர்களுக்கு அவர் தெரிவித்தார். இந்தியடென்னிஸ் அணியின் பயிற்சியாளர் நரேந்திரநாத் வந்திருந்து வீரர்களுக்கு கேட்சிங் பயிற்சி அளித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications