உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை

Subscribe to Oneindia Tamil
வி-ழுப்புண்-களோடு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் --காஷ்-மீ-ரின் தி-ராஸ்

திராஸ் (ஜம்மு-காஷ்மீர்):

கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுறுவலையடுத்து கடும் போரைச் சந்தித்த ஜம்மு-காஷ்மீரின் திராஸ் ப-கு-தி, போரின் வடுக்கள்மறைந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகி வருகிறது.

கார்கில் போரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அப்போரின்போது டிராஸ் பகுதியிலும் தீவிரவாதிகள் ஊடுறுவல் இருந்தது.தீவிரவாதிகளை விரட்டியடிக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட கடும் தாக்குதலின்போது டிராஸ் பகுதியில் எப்போதும் வெடிச் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அழகிய மலைகளைக் கொண்ட டிராஸ், கார்கில் போரின்போது பொலிவை இழந்து, வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது இருந்த நிசப்தம் மாறி இப்போதுதனது பழைய சுறுசுறுப்பைப் பெற்று வருகிறது டிராஸ்.

ஸ்ரீநகர்-லே சாலை போக்குவரத்திற்காக விரைவாக திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தியுள்ளது. வழக்கமாகஇந்தச் சாலை மே மாத இறுதியில்தான் திறக்கப்படும்.

வழக்கமாக 11,000 அடி உயரத்திலிருந்து ஜோஜில்லா மலையிலிருந்து விழுந்து கிடக்கும் பனிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினரும்,ராணுவத்தினரும் அகற்றிய பின்னரே, சாலை திறக்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதியே சாலை திறக்கப்பட்டு விட்டது. எல்லை சாலைகழகத்தின் அயராத பணி காரணமாக சாலை விரைவில் திறக்கப்பட்டு விட்டது. சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள லடாக் பிராந்தியத்திற்குஇந்த சாலை செல்கிறது.

-திராஸ் பகுதியில் இந்தியக் கொடிகளைக் பார்க்க முடியவில்லை. ஆனால் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து டிராஸ் மீட்கப்பட்ட பின் இந்தியக் கொடிகளுடன் இருந்தராணுவ வீரர்களின் முகங்கள் இப்பகுதி மக்களின் மனங்களில் இன்னும் நீங்காமல் உள்ளது.

-திராஸ் பகுதியிலிருந்து பார்த்தால் டைகர் மலை, டோலோலிங் மலை ஆகியவை தெரியும். டைகர் மலையை மீட்க இந்திய வீரர்கள் மேற்கொண்டதீரமான போர் யாராலும் மறக்க முடியாதது. இந்த மலையை சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் பார்த்து நிற்கின்றனர்.

டெல்லியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணியான சதீந்தர் சிங் கூறுகையில், இந்திய வெற்றியின் பின் உள்ள இமாலய முயற்சிகளை டைகர் மலை எனக்குஞாபகப்படுத்தியது என்றார்.

--திராஸ் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சகீர் கூறுகையில், இதுவரை 16 சுற்றுலா பேருந்துகள் வந்து சென்றுள்ளன. ஒவ்வொரு பஸ்ஸிலும் 40 முதல் 50பயணிகள் இருக்கின்றனர். நாட்டின பல்வேறு பகுதிகளிலுமிருந்து இவர்கள் வருகின்றனர் என்றார்.

உலகிலேயே அதிக குளிரான பகுதிகளில் இரண்டாவது இடத்தில் டிராஸ் உள்ளது. இங்கு மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இங்குதட்பவெப்பம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்ட நடந்த போரின்போது இது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. குளிரைப் பொருட்படுத்தாமல் எதிரிகளைவிரட்டியடித்தனர் இந்திய வீரர்கள்.

கார்கில் விழா:

ஜூன் 15-ம் தேதி முதல் இங்கு கார்கில் விழா நடத்த ஜம்மு-காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. 10 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் சுற்றுலா ஆணையர் பர்வேஸ் திவான் கூறுகையில், இன்னும் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றுஎதிர்பார்க்கிறோம். கார்கில் பகுதியை போருக்கான இடமாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை.

செறிவான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது கார்கில். நன் நன் போன்ற உயரமான, கம்பீரமான மலைத் தொடர்களைக் கொண்டது கார்கில். இதைஎல்லாம் கண்டு களிக்க வருமாறு நாங்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+