உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை
சென்னை:
கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஜெயலலிதா நிராக-ரித்து விட்ட -நிலையில், அடுத்தாண்டில் சந்திக்கவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் எத்தகைய வியூகத்தை மேற்கொள்வது என்பது பற்றி விவாதிப்பதற்காக தமாகாவின் -நிர்வாகக் குழு கூடுகிறது.
இத்தகவலை தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு கொடுக்கத் தயா-ரில்லை என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ள-நிலையில், தமாகாவின் தோழமை கேள்விக்குறியாகி உள்ளது.
கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் காமராஜர் ஆட்சிக்கு வழி காண -முடியும் என்ற -நம்பிக்கையில்இருந்தார் -மூப்பனார்.
ஆனால், அவரது விருப்பத்திற்கு ஜெயலலிதா தடை போட்டு விட்டதால், அடுத்து எத்தகைய அணுகுறையை தமாகாமேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டு அவரோடு தோழமையை தொடருமா அல்லது மூன்றாவது அணி என்ற-மு-யற்சியில் இறங்கி மறுபடியும் சூடு போட்டுக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு விடை காண்பதற்காக கட்சியின் நிர்வாகக் குழுவை அவசரமாக கூட்ட -மு-டிவு செய்துள்ளார் -மூப்பனார். -முழுக்க -முழுக்ககூட்டணி விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக இக்குழு சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டப்படுகிறது என்றார்-மூப்பனார்.
இதுகுறித்து காஞ்சிபுரத்தில் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - தமாகா ஆட்சி அமைந்திருப்பது ஒரு பிள்ளையார் சுழி என்று கூறியுள்ளீர்களே... அதுதமிழ்நாட்டிலும் தொடருமா?
பதில்: முயன்றால் -முடியாதது எதுவுமில்லை. தமிழ்-நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இரு கட்சிகளும் இணைந்து அஞ்சலி செலுத்தியது பற்றி...?
பதில்: ராஜீவ் காந்தியின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளதால் தமிழ்நாட்டில் தமாகா, காங்கிரசுடன்இணைந்து செயல்படும்.
கேள்வி: அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: திமுக தலைவர் கருணா-நிதி கூட தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார். இதுசம்பந்தமாக தேர்தல் வருகிற-நரத்தில் கலந்து ஆலோசிக்கப்படும்.
கேள்வி: தமிழ்நாட்டில் பாமக - தமாகா இணைந்து மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே?
பதில்: நீங்களே வதந்தியை பரப்பாதீர்கள்.
கேள்வி: தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் வளர்த்து விட்டனர். இந்தியாவின் ஒருமைப்பாட்டையும்,ஒற்றுமையையும் காக்க இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை தேவை.
கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் தமாகாவின் வியூகம் எவ்வாறு அமையும்?
பதில்: அதுபற்றி எங்கள் கட்சியின் நிர்வாகக் குழு 15 நாட்களுக்குள் கூடி -முடிவெடுக்கும் என்றார் -மூப்பனார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications