தமிழகத்தில் இன்று
சென்னை:
5-ம் வகுப்பு வரை கட்டாயத் தமிழ் பயிற்று மொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரதமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் அலுவல் துவங்கியவுடன், சென்னைஉயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் டி.ஆர். ராஜகோபாலன்தெரிவித்தார்.
தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை தமிழில் தான் அனைத்துப் பாடங்களையும் பயிற்றுவிக்கவேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் பேரவையினர் உள்பட பல தமிழ்அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தமிழ் தான்பயிற்று மொழியாக இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பெற்றோர்களும், தனியார் பள்ளி சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. தனதுகுழந்தைக்கு எந்த மொழியில் பாடங்களைப் பயிற்றுவிக்கவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க பெற்றோர்களுக்குத் தான் உரிமை உள்ளது. இந்தஉரிமையில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.
மேலும், தமிழக அரசின் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை மீறுவதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது.ஆகவே, தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
எந்த மொழியில் பயிற்றுவிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. கல்வித் துறையில் எந்த திட்டத்தையும்அறிமுகப்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் எந்த மொழியில் பாடங்களைப்பயிற்றுவிக்கவேண்டும் என்று உத்தரவிடவும், அது தொடர்பாக கல்வித் திட்டத்தில் தக்க மாற்றங்களைச் செய்யவும் அரசுக்கு ஆதாரம் உள்ளது.
எந்த மொழியில் பாடங்களைப் பயிலவேண்டும் என்பதை தேர்வு செய்வது அடிப்படை உரிமை இல்லை. தனது தாய் மொழியில் பாடங்களைப்பயிற்றுவிக்கவேண்டும் என்று கோருவதுதான் ஒரு குழந்தையின் அடிப்படை உரிமை. குழந்தையின் நலனில் அக்கறை காட்டுவதுதான் பெற்றோரின்கடமை. இந்த வகையில்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விவாதிக்கும் என்றார் ராஜகோபாலன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications