வருகிறது ஆசிய கிரிக்கெட் தி-ருவிழா!
பெங்களூர்:
குரோனியே...பெட்டிங்...மேட்ச் பிக்ஸிங்... என பட்டியல் நீண்டாலும், அதை விட விறுவிறுப்பான ஆசிய கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமைதாக்காவில் துவங்குகிறது.
புகார்கள், எதிர் புகார்கள், விளக்கங்கள் என எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் அதைப் புறந்தள்ளி விட்டு கிரிக்கெட் விருந்தை சுவைக்க இந்தியத்துணைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இரண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நடத்திய இந்தியா, பாகிஸ்தான், ஒருமுறை உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தியஇலங்கை, கிரிக்கெட் உலகின் கற்றுக் குட்டியான வங்கதேசம் ஆசியவை இந்தப் போட்டியில் மோதவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை தலா ஒருமுறை இந்தக் கோப்பையை வென்றுள்ளன. 1984-ல் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிதுவங்கியது. துவக்கத்தில் அதிகம் கவனிக்கப்படாத இப்போட்டித் தொடர் பின்னர், முக்கியப் போட்டியாக மாறியது. ஆசியாவின் மினி உலகக் கோப்பைப்போட்டி எனும் அளவிற்கு அந்தஸ்து பெற்றது.
முதல் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்றன. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடக்கத் துவங்கியது. 1991-ம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு இந்தப் போட்டிநடத்தப்படவில்லை.
இந்தியா ஒருமுறை இந்தப் போட்டியை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் இதுவரை நடத்தியதில்லை. ஷார்ஜாவும், இலங்கையும் தலா ஒருமுறை இப்போட்டியைநடத்தியுள்ளன. மூன்று நாட்கள் மட்டுமே பங்கேற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம் வந்த பிறகு போட்டி களை கட்டத் துவங்கியது. 1988-ல்வங்கதேச தலைநகர் தாக்காவில் நடந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
டெஸ்ட் அந்தஸ்தை விரைவில் பெறும் நிலையில் உள்ள வங்கதேசம், தற்போது 7-வது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது.தாக்காவிலுள்ள பங்கபந்து ஸ்டேடியத்தில் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி துவங்குகிறது.
ஆசியப் போட்டி அடிக்கடி முக்கியத்துவம் இழந்ததற்கு இப்பிராந்தியத்தின் "பெரிய அண்ணன் இந்தியாவும் ஒரு காரணம். 1988-ம் ஆண்டு போட்டியிலிருந்துவிலகுவதாக இந்தியா அறிவித்தது. இதனால் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மட்டும் மோதின. மற்றொரு முறை, இரண்டாம் தரஅணியை இந்தியா அனுப்பியது.
ஆசியப் போட்டியில் விளையாடுவதை பலமுக்கிய வீரர்கள் பெரிதாக நினைப்பதில்லை. இதை பெரிய சுமையாக அவர்கள் நினைக்கிறார்கள். தேவையில்லைஎன்று முடிவு செய்து விட்டால், அவர்கள் சுலபமாக தங்களைக் கழற்றிக் கொள்கிறார்கள்.
கடந்த முறை கொழும்பில் நடந்த போட்டிக்குப் பிறகு நிலைமை மாறியது. பெரிய ஸ்பான்சர்கள் கிடைத்தார்கள். இதனால் அணிகளுக்கும், வீரர்களுக்கும்பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைத்தது.
ஆசியக் கோப்பையை அதிக அளவில் வென்றுள்ளது இந்தியாதான். ஐந்து முறை போட்டியில் பங்கேற்ற இந்தியா, நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது.1997-ல் கொழும்பில் நடந்த போட்டியில் மட்டும், இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்றது. அதற்கு முந்தைய ஆண்டுதான் இலங்கைஉலகக் கோப்பையை வென்ற தெம்பில் இருந்ததால் அந்த வெற்றி சாத்தியமாயிற்று.
இந்தியாவின் பரம விரோத அணியான பாகிஸ்தான் இதுவரை இக்கோப்பையை வென்றதில்லை. மொத்தம் ஆறு முறை பாகிஸ்தான் இப்போட்டியில்பங்கேற்றுள்ளது. 1986-ல் இறுதிப் போட்டி வரை வந்தது.
இந்த முறை பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் இல்லை. வாசிம் அக்ரம், சொயீப் அக்தர், சக்லைன் முஷ்டாக் ஆகியோர் அணியில் இல்லை. இருக்கிற,முன்னணி வீரர்களின் பேட்டிங்கும் சொல்லிக் கொள்வது போல இல்லை. பந்துவீச்சும் பலவீனமாகவே உள்ளது. எனவே கோப்பைக் கனவுபாகிஸ்தானியர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கு மாறாக, இலங்கை புதிய பொலிவுடன், கேப்டன் ஜெயசூர்யா தலைமையில் தெம்பாக களத்தில் உள்ளது. 99-ல் உலகக் கோப்பைப் போட்டியில்சந்தித்த மோசமான தோல்வியை மறந்து, தொடர்ந்து பல வெற்றிகளை புதிய கேப்டன் ஜெயசூர்யா தலைமையில் குவித்துள்ளது இலங்கை. இதுதவிர, நடப்புச்சாம்பியன் என்ற கூடுதல் தகுதியும் அதற்கு மனோரீதியான பலத்தைக் கொடுத்துள்ளது.
பேட்டிங் மும்மூர்த்திகள் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் தலைமையில் இந்திய அணி வலுவுடன் உள்ளது. ஆனால் இவர்கள் மட்டும் ஆடினால் போதாதுஎன்ற நிலையில் இந்தியா இருப்பதால் மொத்த அணியும் சேர்ந்து விளையாடினால்தான் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
டெண்டுல்கர், கங்குலி ஜோடி, இன்றைய ஒரு நாள் கிரிக்கெட்டின் சிறந்த துவக்க ஆட்டக்கார ஜோடியாக உள்ளது. அவர்கள் வலுவான துவக்கத்தைத்தந்தால் பின்னர் வரும் வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள். இல்லாவிட்டால் பின் வருபவர்களும் சரியாக விளையாடுவதில்லை. இந்த குறைஇன்னும் இந்திய அணியில் தொடருவது மிகப் பெரிய பின்னடைவாகும்.
இந்திய பெளலிங் மிகவும் பரிதாபமானதாக காணப்படுகிறது. ஸ்ரீநாத் இல்லை. வெங்கடேஷ் பிரசாத் இல்லை. தேபஷிஷ் மொகந்தி கூட இல்லை. தமிழகத்தின்குமரன், மும்பையின் அகர்கர், டெல்லியின் அமித் பண்டாரி ஆகிய மூவருமே வேகப்பந்தைக் கையாளப் போகிறார்கள்.
ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகியிருக்க ஸ்ரீநாத் முடிவு செய்துள்ளார். பிரசாத் தேர்வு செய்யப்படவில்லை. இதேதான் மொகந்தி கதையும். இந்த நிலையில்அனுபவம் வாய்ந்த அகர்கர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் கும்ப்ளே கையில்தான் விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பு உள்ளது. சுனில் ஜோஷியும், நிகில்சோப்ராவும் கூடஅணியில் உள்ளனர்.
பெட்டிங், மேட்ச் பிக்ஸிங் புகார்களையும் தாண்டி கிரிக்கெட்டை மட்டுமே பெரிதாக நினைக்கும் ரசிகர்கள், ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியைக்காண ஆவலோடு உள்ளனர். கபில் தேவ் மீதான புகார், பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதான ஊழல் புகார்கள் என பல கருமேகங்கள் இருந்தாலும்,அதையும் தாண்டி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கிரிக்கெட்டைப் பார்க்க உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள் ஆசிய கிரிக்கெட் ரசிகர்கள்.
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications