For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசியக் கோப்பையை வெல்வோம் - கங்குலி

By Staff
Google Oneindia Tamil News

பழங்களிருக்கும் போது வரும்-

பருக

இலைகளிருக்கும் போது வரும்-

இளைப்பாற-

இரைதேடி களைத்த பறவைகளும் வந்தமரும்

நிழலாட-

வானம்பாடிகள் நிலவொளியில் தன் இணைக்கான

வசந்த ராகங்களை வாசிக்கும்-

-----------------------------------------------------

இலைகளில்லாத மரங்கள்

செல்வாக்கில்லாத மனிதர்கள்-

செல்லாக்காசாகி விடுகிற சுபாவத்தில்.

--------------------------------------------------

காகம் வந்து அமர்ந்தது-

இரவு சாயும் போது-

காகம் எண்ணி விட்டது-

அந்த இரவை அந்த மரத்திலேயே கழிப்பது என்று-

இரவுக்கும்-

மரத்திற்கும்-

காகம் மட்டுமே துணை-

மரம் எண்ணிப் பார்க்கலாம்- தேடிப்பார்க்கலாம்-

------------------------------------------------

தன் வசந்தகாலத்தில்

தன் பழங்களைப் பறிக்க யாரேனும் வருகிறார்களா என்று-

பறவைகளேதும் வருமா

பேச்சுத் துணைக்கு என்று.

----------------------------------------------

பாவம் இந்தக் காகம்-

இது பழங்களையும் தின்றதில்லை-

நிழல் தேடியதும் இல்லை.

காகங்களின் பார்வை

வானத்தை நோக்கியில்லாமல்-

தரையை நோக்கியே தாழும்

எதார்த்தம் அவற்றின் பார்வையில் உண்டு

------------------------------------------------

மனிதர்கள் சுவைத்து சுவைத்து

சப்பிப்போனவற்றை

எறிந்தபோது தேடித்தேடித் தின்றவை-

பறவைகள் தூக்கி எறிந்த, உதறிப்போன

மரத்தைத் தேடி வந்திருக்கிறது.

காகம் - பாவம் தேடியிருக்கும்-

ஏதும் அகப்படாததால் மெதுவாக

இம்மரத்தில் இறங்கியிருக்கும்-

இந்த இரவு முழுவதும்

மரமும், காகமும் பேசட்டும்-

தங்கள் தனிமையை, சோகத்தை.......

இரவும் தன் ஆத்மாவுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் கதைகளை

அவற்றிடம் பகிர்ந்து கொள்ளட்டும்.

------------------------------------------------------

முதல் பக்-கம்


(தூறல்வரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X