தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தாய்லாந்து நாட்டுக் கப்பல், இந்திய கடலோரக்காவல்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது.
2455 டன் எடையுள்ள எம்.வி. அல்காசர் என்ற பெயருடைய அக் கப்பல், இந்தியக் கடல் எல்லைக்குள் அதுவும்இந்தியாவின் பிரத்யேக மீன்பிடிப்புப் பகுதியில் மினிகாய் தீவுகளுக்கு அருகில் இக் கப்பல் நின்று கொண்டிருந்தது.
அப்போது அவ் வழியே ரோந்து சென்ற இந்திய கடலோரக் காவல்படையின் படகைப் பார்த்து அக் கப்பல்சர்வதேச கடல் எல்லையை நோக்கி வேகமாகச் சென்றது. இந்தியப் படகும் சுமார் 21 நாட்டிகல் மைல் தொலைவுக்குதுரத்திச் சென்று தாய்லாந்து படகை சிறைப்படுத்தியது.
தாய்லாந்து நாட்டின் "மேன் ஏ பிஷ்ஷரீஸ் கம்பெனி என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலில் அதி நவீனகருவிகள் இருந்தன. நவீன தொலைத் தொடர்புச் சாதனங்களுடன் மீன்பிடிப்பதற்குத் தேவையான அனைத்துவசதிகளும் அதில் இருந்தன.
படகில் சுமார் 670 டன் மீன்கள் இருந்தன. அது குறித்து படகில் இருந்த 12 பேரும் சரியான தகவலைத்தெரிவிக்கவில்லை. தற்போது இக் கப்பல் கேரள கடலோரம் நங்கூரமிடப்பட்டுள்ளது. கப்பலில் இருந்தவர்களிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications