முகத்தில் தெளித்த சாரல்...
தி-ராட்--சை, மா-து-ளை, கொய்-யா, தென்-னை, வா-ழை: இ-து ஜெய-ா-வின் ஐத-ரா--பாத் தோட்-டம்
சென்னை:
ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஐதராபாத் தோட்டத்தில் 4.86 ஏக்க-ரில் திராட்சைச் செடிகள் பயி-ரிடப்பட்டிருந்தன. இது தவிர காய்கனிகள்தனியாகவும், தென்னை வாழை போன்ற மரங்கள் தனியாகவும், கொய்யா, மாதுளை, சீதாப் பழம் போன்ற பழ வகை மரங்கள் தனியாகவும்பயி-ரிடப்பட்டுள்ளன என்று சென்னை தனி நீதிமன்றத்தில் ஆந்திர மா-நில தோட்டக்கலைத் துறை அதிகாரி சாட்சியம் அளித்தார்.
-முன்னாள் -முதல்வர் ஜெயலலிதா, அவரது உயிர்த் தோழி சசிகலா மீது வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக தனி நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வியாழக்கிழமை ஆந்திர மா-நில அரசு தோட்டக் கலைத் துறை அதிகா-ரிகள் சாட்சியம் அளித்தனர்.
ஐதராபாத் அருகில் ஜீடி மெட்லா என்ற இடத்தில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான பிரமாண்டமான திராட்டைத் தோட்டம் உள்ளது. இந்ததோட்டத்தில் இரண்டு பங்களாக்களும் உள்ளன என்று இவர்கள் சாட்சியம் அளித்தனர்.
தோட்டக்கலைத் துறையில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ள கே.ஆர்.லதா என்பவர் அளித்த சாட்சியம் வருமாறு:
10.12.96 மற்றும் 11.12.96 ஆகிய இரண்டு நாட்கள் திராட்சைத் தோட்டத்தை நான் ஆய்வு செய்தேன். எங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பிகதிரேசனும் வந்திருந்தார். இத்தோட்டத்தில் விதையுள்ள, விதையில்லாத என இரண்டு வகை திராட்சைச் செடிகள் பயி-ரிடப்பட்டிருந்தன.
3.02 ஏக்கரில் விதையுள்ள திராட்சைச் செடிகள் 580ம், 1.84 ஏக்கரில் விதையில்லாத திராட்சை செடிகள் 1266ம் பயி-ரிடப்பட்டிருந்தன. இது தவிரகத்தரிக்காய், வெள்ளரிக்காய், பாகற்காய் போன்ற காய்கறி வகைகள் தனியாக பயி-ரிடப்பட்டிருந்தன.
தென்னை, வாழை போன்ற மர வகைகள் தனியாக நடப்பட்டுள்ளன. கொய்யா, மாதுளை, சீதாப்பழம் போன்ற பழ வகைகள் தனியாகபயிடப்பட்டிருந்தன. இந்த தோட்டத்தில் நடுவில் இரண்டு பங்களாக்கள் உள்ளன. ஒன்று புதிதாக கட்டப்பட்டது. இன்னொன்று பழைய கட்டத்தை புதுப்பித்துகட்டப்பட்டது என்றார்.
இதே துறையை சேர்ந்த உதவி இயக்குனர் கொன்டாரெட்டி என்பவர் அளித்த சாட்சியம் வருமாறு:
விதையுள்ள திராட்சை செடிகள் பயிரிடப்பட்டு 15 ஆண்டுகள் இருக்கும். அதவாது திராட்சை செடிகள் ஒரு -முறை பயி-ரிட்டால் பல ஆண்டுகள் வரை பலன்தரும். என்பதால் அதன் வயதை கணக்கிட்டுக் கொள்ள -முடியும். விதையில்லாத திராட்சை செடிகளுக்கு 4 ஆண்டுகள் வயதிருக்கும்.
விதையுள்ள திராட்சை செடிகள் மூலம் 91-96 வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து 420 ரூபாயும், விதையில்லாத திராட்சை செடிகள் மூலம் 93-96 வரை 2லட்சத்து 18 ஆயிரத்து 960 ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications