தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 30 கோடி வழங்க அரசு முடிவு
சென்னை:
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கித் தொகையில், முதல்கட்டமாக ரூ. 30 கோடியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி புதன்கிழமை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே அரசு வழங்கிய 21 கோடி ரூபாய் போக தற்போது 69 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இத்தொகையை வழங்கும் வகையில் முதல்கட்டமாக தமிழக அரசு முப்பது கோடி ரூபாய் வழங்குவது என முடிவு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications