மழையால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாதிக்கப்படும் அபாயம்
டாக்கா:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்போட்டித் தொடரும், பருவ மழையால் பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
டாக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுதொடர்ந்தால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இலங்கை-வங்கதேசம் இடையிலான முதல் போட்டிபாதிக்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெடெ வாரியத் தலைவர் சாபெர் ஹுசேன் அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை முதல் டாக்காவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. மழை தொடரும்என்றும், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக, டாக்கா மைதானத்தில் உள்ள பிட்சுக்கள் தார்பாலின் போட்டு மூடப்பட்டுள்ளன. ஆனால்,மைதானத்தின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீரை வெளியேற்றும் பணியில் மைதான ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த சில நாட்களுக்கு நாள்தோறும் 2 அல்லது 3 மணி நேரம் வெய்யில் அடித்தால் மைதானம் காய்ந்துவிளையாடுவதற்கு ஏற்றதாகிவிடும் என்று மைதானத் தலைவர் முகம்மது ஆலம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டே ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், பாகிஸ்தான்மற்றும் இந்திய அணிகள் வேறு சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்திருந்தன.இதையடுத்து கடந்த ஆண்டு இப் போட்டி நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, சனத் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை அணி வியாழக்கிழமை காலை டாக்கா வந்து சேர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை துவங்கும் ஆசியக் கோப்பைப் போட்டி, ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications