தமிழகத்தில் இன்று
அமெரிக்க டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதுகுறைந்துள்ளது. இதுவரை ஒரு டாலருக்கு மாற்றாக ரூ.44 ரூபாய்க்கும் குறைவாக இருந்த ரூபாயின் மதிப்புபுதன்கிழமை ரூ.44.15-ஆக குறைந்தது.
இந்த வாரம் முழுவதும் ரூபாயின் மதிப்பு குறைந்து காணப்படும் என்று வங்கித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாழக்கிழமையன்று ஒரு டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.44.29 என்று மத்திய ரிசர்வ் வங்கிநிர்ணயித்ததுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், வங்கிகள் வற்றும் தொழில் நிறுவனங்களுக்கு டாலருக்கு எதிராகஇந்திய ரூபாய்க்கு அதிக டிமாண்ட் இருந்ததால் ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது என்று வங்கித்துறை நிபுணர்கள்தெரிவித்தனர்.
டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு கவலைப்படத் தேவையில்லை. தேவைக்கும்,விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இதற்குக் காரணம். இப் பிரச்சினை விரைவில் தீரும். கடந்தசில ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் மதிப்பு சராசரியாக 2 முதல் 2.5 சதவீதம் குறைந்து கொண்டே வருகிறஎன்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications