தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
மண்டபம் அகதிகள் கோவை, சேலத்திற்கு மாற்றம்

ராமேஸ்வரம்:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர் உச்சகட்டத்தை அடைந்ததையடுத்து தமிழகத்தில் ராமேஸ்வரத்திற்கு வரும் அகதிகள்கோவைக்கும், சேலத்திற்கும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

இலங்கைப் போரினால் அங்கிருந்து படகு மூலம் தப்பி வரும் அகதிகள் ராமேஸ்வரத்திலுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.மண்டபம் அகதிகள் முகாமில் 7000 பேர் தங்கலாம். போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து அங்கிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மண்டபம் அகதிகள் முகாமில் ஏற்கனவே வந்து தங்கியிருக்கும் அகதிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் அங்கிருந்துகோவை, மற்றும் சேலம் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். மண்டபத்திலுள்ள 700 அகதிகள் வியாழக்கிழமை இரவு சேலத்திற்குஅனுப்பப்பட்டார்கள். அவர்களுக்காக 10 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

900 அகதிகள் கோவை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். தொடர்ந்து மண்டபத்திற்கு வரும் அகதிகள் அங்கிருந்து சேலம் மற்றும்கோவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+