"டாக்காவிலிருந்து வரட்--டும்": கபில், அசா-ருக்-கா-க காத்-தி-ருக்-கி-ற-து சிபிஐ
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் தேவ், அசாருதீன் ஆகியோரிடம் சிபிஐவிசாரணை நடத்தவுள்ளது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்துவங்குகின்றன. ஜூன் 7-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசியக் கோப்பை முடிந்து இந்திய அணிதாய்நாடு திரும்பிய பிறகு கபில் தேவ் மற்றும் அசாருதீனிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்குஎதிரான ஆட்டத்தில் திறமைக்கும் குறைவாக விளையாடும்படியும், அதற்கு ரூ.25 லட்சம் தருவதாகவும் கபில் தேவ்தன்னிடம் கூறியதாக மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகளாகவே இந்த குற்றச்சாட்டைக் கூறி வந்த பிரபாகர் கபில் தேவின் பெயரை மட்டும்தெரிவிக்கவில்லை. ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணை மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்தின் நெருக்குதல் ஆகியவை காரணமாக இரு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் கூட்டத்தில் கபில்தேவின் பெயரை பிரபாகர் தெரிவித்தார். தான் கூறியது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக கவாஸ்கர், ரவிசாஸ்திரி, சித்து, அசாருதீன் உள்ளிட்ட சில வீரர்களின் பெயரை பிரபாகர் வெளியிட்டார்.
பிரபாகர் குறிப்பிட்ட வீரர்களில் கபில் தேவ் மற்றும் அசாருதீன் மட்டுமே இப்போது இந்திய அணியில் உள்ளனர்.மற்றவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து, டாக்காவிலிருந்து திரும்பிய பிறகுதான்அசாருதீன் மற்றும் கபில் தேவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியஅணி ஞாயிற்றுக்கிழமை டாக்கா செல்கிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications