தமிழகத்தில் இன்று
டெல்லி:
மத்திய மந்திரிசபையில் இன்று புதிய மந்திரிகள் நியமிக்கப்பட இருகிறார்கள்.
அதையொட்டி சில மந்திரிகளின் இலகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. புதிய மந்தரி பதவிகளுக்கு பலபெயர்கள் அடி-பட்-டு வருகின்ற-ன.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் வாஜ்பேய் அளித்த பேட்டியில் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றுகூறியிருந்தார். அதன் படி மந்திரி சபை -ச-னிக்-கி-ழ-மை விரிவுபடுதப்படுகிறது. பதவி ஏற்பு வைபவம் காலை 11மணியளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஞாயிற்-றுக்-கி-ழ-மை ஓய்வு எடுப்பதற்காக சிம்லா செல்கிறார், ஜனாதிபதி கே.ஆர். நாராயணனும் சீனாபுறப்பட்டு செல்வதால் இன்று மந்திரிசபை விரிவமைப்பும், இலாகா மாற்றங்களும் நடை பெற உள்ளது.
பீகார் முதல்வராக பதவி ஏற்க வேளாண் துறை அமைச்சர் தன் மந்திரி நிதீஷ் குமார் பதவியை ராஜினாமா செய்தார்.எஃகு மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் நவின் பட்நாயக் ஒரிசா முதல்வராகி இருப்பதால் அவரும் தன்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். சுற்றுலாத்துறை இணை அமைச்சர் உமா பாரதியும் உள் கட்-சி பிரச்-ச-னை-யால்பதவியை ராஜினாமா செயதுவிட்டார்.இந்த மூன்று இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் பெயர்கள் வருமாறு:
எஸ். எஸ். அலுவாலியா, சுஷ்மா சுவராஜ், நிதிஷ்குமார், தமிழ்நாட்டின் நாகர் கோவில் எம்.பி. பொன்.ராதாகிருஷணன், எஸ்.ஆர்,மூர்த்தி, உமா பாரதி (மீண்-டும்!), டெல்லி பி.ஜே.பி. தலைவர்கள் சாகிப் சிங் வர்மா,விஜய்குமார் மல்கோத்ரா, மதன்லால் குரானா, விஜய்கோயவல், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த மன்மோகன் சமல்என்--று பட்-டி-யல் நீள்-கி--ற-து.
சுஷ்மா சுவராஜ் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்துகர்நாடகத்தில் உள்ள பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில்காணப்படவில்லை. அவருக்கு உறுதியாக மந்திரி பதவி அளிக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
மாற்றி அமைக்கப்படும் மந்திரிகள், இலாகா பொறுப்புக்கள் பற்றியும் பல ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி மத்திய சுகாதார மந்திரி (தனி பொறுப்பு) வகிக்து வரும் சண்முகம், ஜக்மோகன் (நகர்புற வளர்ச்சி),பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சரத் யாதவ், தொலை தொடர்புத்துறை அமைடர் ராம்விலாஸ்பஸாவான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை கவனித்து வரும் பிரமோத் மகாஜன்ஆகியோரின் இலாகாகக்கள் மாற்றப்படும் என -கூ-றப்-ப--டுகி-ற-து.
ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு மின்சாரத்துறைக்கு பதிலாக சுகாதாரத்துறை கொடுக்கப்படலாம் என்று ஒரு தகவல்கூறினாலும் அது சுஷ்மா சுவராஜூக்குத்தான் ஒதுக்கப்படும் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்-ப-டு-கி-ற-து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications