தமிழகத்தில் இன்று
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் எல்லை கடந்து வர்த்தகம் மேற்கொள்ள தக்க உதவிகளைச் செய்யவேண்டும்என்று இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 மாநில அரசுகளும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இது தொடர்பாக, அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்தி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டி:
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிகவாய்ப்பு உள்ளது. அதற்காக, இந்திய சுதந்திரத்துக்கு முன் ஏற்படுத்தப்பட்ட மியான்மர் வழியாக சீனாவைஇணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்டில்வெல் சாலையைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இச் சாலை திறக்கப்பட்டால், சீனா மட்டுமல்ல தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வடகிழக்குமாநிலங்கள் வர்த்தக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஸ்டில்வெல் சாலையை மீண்டும்போக்குவரத்துக்கு திறந்துவிடும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இது தொடர்பாக,வடகிழக்கு மாநிங்களைச் சேர்ந்த முதல்வர்கள் அடுத்த மாதம் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்து பேச உள்ளோம்.
தீவிரவாதக் குழுக்களின் வன்முறைச் செயல்கள் அதிகம் நடைபெறுவதால் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் பொருளாதார நிலையில் அவை மிகவும் பின்தங்கியுள்ளன. சர்வதே எல்லைப்பகுதி வழியே வர்த்தகம் மேற்கொள்ள இந்த 7 மாநிலங்களுக்கும் அனுமதி அளித்தால் அதன் மூலம் பொருளாதாரமேம்பாட்டை அவை அடைய வாய்ப்புள்ளது.
1079 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்டில்வெல் சாலை, அஸ்ஸாமில் துவங்கி, மியான்மரில் உள்ள பாங்சா கணவாய்வழியாக தென் சீனாவில் குன்மிங் என்ற இடத்தில் முடிவடைகிறது. சீனாவுக்கு மட்டுமல்ல தென் கிழக்கு ஆசியநாடுகளின் தலைநகர்களுக்கான இணைப்பை இச் சாலை ஏற்படுத்தித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பழங்கள், உணவுப் பொருட்கள்,காய்கறிகள், துணி, பருந்தி நூல் போன்றவற்றுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. அதே நேரத்தில், செயற்கை இழையால்நெய்யப்பட துணிகள், மின்னணுச் சாதனங்கள், தேக்கு, தங்கம் மற்றும் ரத்தினக் கற்களுக்கு இந்திய மார்க்கெட்டில்அதிக டிமாண்ட் உள்ளது.
ஸ்டில்வெல் சாலையைத் திறந்தால், மேற்கண்ட இரு தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். வடகிழக்குமாநிலங்களின் நுழைவாயிலாக அஸ்ஸாம் உள்ளது. அஸ்ஸாமிலிருந்து டெல்லி 2000 கிலோமீட்டர் தூரத்திலலும்,மும்பை 3000 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. ஆனால் யங்கூன், பாங்காக் மற்றும் பல சீன நகரங்களுக்கும்அஸ்ஸாமுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைவு. ஸ்டில்வெல் சாலை போக்ககுவரத்துக்குத்திறக்கப்பட்டால், மிகவும் எளிதாக வர்த்தகம் மேற்கொள்ளமுடியும் என்றார் மித்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications