தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் கடும் இறுதித் தாக்குதல்மூளவிருக்கும் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து 2000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பானஇடத்திற்குச் சென்றுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
2000 பேருக்கும் மேல் யாழ்ப்பாணத்தின் முக்கியப் போர்க்களப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டாலும் கூடஇன்னும் பலர் இரு தரப்பினருக்கும் இடையே சிக்கியுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
லண்டனில் இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அகதிகளுக்கான அமைப்பின் ஆணையர்வெளியிட்ட அறிக்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை ராணுவத்தினர் வெளியேறுவதற்கு வசதியாக 12 மணிநேர காலக் கெடு சனிக்கிழமை இரவு 10 மணியுடன் முடிந்து விட்டது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்,இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மிகவும்விழிப்புணர்வோடு இருந்து வருகின்றனர். தென் மராச்சி பகுதியிலிருந்துதான் அதிக அளவில் தமிழர்கள்வெளியேறி வருகின்றனர். யாழ்ப்பாணத்திற்கு சில மைல்கள் தூரத்தில் இது உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில்உள்ள பகுதிகளுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.
தென் மராச்சி பகுதியில் போர் நடப்பதைத் தவிர்க்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.ஆனால்இதுவரை அரசுத் தரப்பிலிருந்து பதில் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, ராணுவ செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னாண்டோ கூறுகையில், சாவகச்சேரி பகுதியில்தங்களிடமுள்ள நவீனரக போர்ப் படையை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்த அவகாசம் தேவைப்படுவதால், போர்நிறுத்தம் செய்வதாக புலிகள் அறிவித்துள்ளதாக கூறினார். இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications