தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

சென்னை:

தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர்வை.பாலசுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதி சங்கங்கள் கிடையாது. ஆனால், தற்போது இங்கு ஏராளமான சாதிசங்கங்கள் நிலை கொண்டு விட்டன. இதனால் சாதீய உணர்வுகள் தலைவிரித்தாடுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை காப்பதற்கு த்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.அதை ரத்து செய்ய வேண்டும் என்று சமீப காலமாக சில சாதி ஆதிக்க அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.

இவர்களின் சமூக விரோத போக்கை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்காதது வேதனை தருகிறது. சாதி சங்க மாநாடுநடத்த தமிழக அரசு தாராளமாக அனுமதி தருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அமைதிக்கு பங்கம்ஏற்படும் நிலை உள்ளது. தமிழக அரசு இங்குள்ள சாதி கட்சிகளை தடை செய்ய வேண்டும். இதற்கான அவசரச்சட்டம் விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+