தமிழகத்தில் இன்று
மேற்கு வங்க மாநிலத்தில் கல்யாணி அல்லது துர்காபூர் பகுதியில் உயர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உலகின் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம். நிறுவனத்துடன் இணைந்து இந்த பூங்காவை அமைக்க மேற்கு வங்க முடிவு செய்துள்ளது.தொழில்நுட்பப் பூங்கா குறித்து தற்போது ஐ.பி.எம். நிறுவனத்துடன் மேற்கு வங்க அரசு சார்பில் டாடா நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. விரைவில்மேற்கு வங்க அரசே நேரடியாக பேச்சு நடத்தும் என்று மேற்கு வங்க துணை முதல்வர் புத்தாதேவ் பட்டாச்சார்ஜி தெரிவித்தார்.
தொழில் நுட்பப் பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளபோதிலும், அதை எங்கு அமைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. பர்ட்வான் மாவட்டத்தில்துர்காபூர் அல்லது நாடியா மாவட்டத்தில் கல்யாணியில் இப் பூங்கா அமைக்கப்படும். இதற்காக சுமார் 60 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்படும்.
தொழில் நுட்பப் பூங்கா அமைப்பது தொடர்பாக, தலைமைச் செயலர் மணிஷ் குப்தா தலைமையில் உயர்மட்ட நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2005-ம் ஆண்டு வாக்கில் மொத்த இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியில் 20 சதவீத பங்கை அளிக்க மேற்கு வங்க மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.அதற்கு ஏற்ப, மேற்கு வங்க அரசு தனது பொருளாதாரத் திட்டங்களை மாற்றி அமைத்து அவற்றை விரைவாகவும், முழு வீச்சிலும் அமல்படுத்திவருகிறது என்றார் பட்டாச்சார்ஜி.
தொழில்நுட்பப் பூங்கா தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஒரு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு நாடு முழுவதும் சுமார் 50 இடங்களில்தொழில் நுட்பப் பூங்காக்களை அமைக்கலாம் என்றும் அதன் மூலம் 2008-ம் ஆண்டு வாக்கில் நாட்டின் சாப்ட்வேர் ஏற்றுமதியை ரூ.2.15 லட்சம்கோடியாக அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
அதன்படி நாட்டில் அமையவுள்ள 50 தொழில்நுட்பப் பூங்காக்களில் இரண்டு பூங்காக்கள் மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்றும்அவை, கல்கத்தாவுக்கு அருகே அமைக்கப்படும் என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications