தமிழகத்தில் இன்று
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் ஜூன் 2-ல் விடுதலை
சென்னை:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஜூன் 2-ம் தேதி விடுதலைப் படுவார்கள் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சகம்கூறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சுடலை முத்து, கைலாசம், லிங்கம், முத்துசாமி,ராமநாதன், வெள்ளைச்சாமி, மணிகண்டன், ராமநாதன் ஆகிய எட்டு பேருக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறை வைத்தனர். இவர்களை மீட்க தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிஃபர் சந்திரன்இலங்கையிலுள்ள இலங்கை தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வெள்ளைச்சாமி இறந்துவிட்டார். அவரது உடல் படகு மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது.
இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்திருந்த 7 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டார்.தற்போது அந்த ஏழு மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இரண்டு படகுகள் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், அவர்கள் வரும்ஜூன் 2 ம் தேதி தமிழகம் வருவதாகவும், இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications