தமிழகத்தில் இன்று
துபாய்:
குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த அக்டோபர் 25 ம் தேதி கையெழுத்தானது. எமிரேட் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சாயிப் சயித், இந்தியாவின்சார்பில் கே.சி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டில் குற்றம் செய்து விட்டு, அடுத்த நாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை நாடுகடத்தி சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கொண்டு வர வகை செய்கிறது. பயங்கரவாதத்தைக் குறைப்பது, பொருளாதார குற்றங்களைத் தடுப்பது ஆகியநோக்கத்தில் இந்த ஒப்பந்தம் உருவானது.
குற்றவாளிகள் தவறு செய்து விட்டு அடுத்த நாட்டுக்குத் தப்பி விடுவதால், இந்தியாவில் பல வழக்குகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன.தற்போதைய ஒப்பந்தம் மூலம் குற்றவாளிகளைப் பெற்று, வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு குற்றம் செய்து விட்டு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளும் நாடு கடத்தப்படுவர்.
இதுவரை, இந்தியா 20 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் ஓமனுடன் இதுபோன்ற ஒப்பந்தம்கையெழுத்திடப்படும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications