தமிழகத்தில் இன்று
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் தீவிரவாதிகள்,ஒருவர் பெண்.
ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் வாசல்பகுதியில் உள்ள டாக்ஸி ஸ்டான்ட் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 2பேர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். 9 பேர் படுகாயமடைந்தார்கள்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானாவர்கள் டாக்ஸி டிரைவர்கள். சம்பவ இடத்திற்கு உடனடியாக எஸ்எம்எச்எஸ்மருத்துவமனையிலிருந்து டாக்டர்கள் சென்று முதலுதவி செய்தார்கள்.
காயமடைந்தவர்களின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இதுவரைதெரியவில்லை.
மேலும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் நள்ளிரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டதில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர்வெளிநாட்டுத் தீவிரவாதிகள்.
ஸ்ரீநகரில் ஜால்கோட்- மஞ்சாகோட் பகுதியில் தீவிரவாதிகள் தஸ்லீமா என்ற பெண்ணைக் கடத்திக் கொலை செய்தார்கள். இதையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ராணுவத்தினர் அப்பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
இதேபோல் ஃபரோட்டி-குஜ்ரான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தார்கள்.
கோலே-படான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 வெளிநாட்டுத் தீவிரவாதிகள்தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கி, டெட்டனேட்டர்கள், சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
காஷ்மீரின் வடக்குப் பகுதியான பாஹ்ராம்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.அப்பகுதியிலிருந்து ராணுவத்தினர் 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 26 புத்தகங்கள், கிரானைட் வெடிப்பொருட்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அபுபிலால், அபு ஜாபர், அபு முஸாமில், மற்றும் குலாம் ஹாசன் ஆகிய தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிப்போரா பகுதியில் குர்ஷித் அகமத் ஹாஜி என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
காஷ்மீரில் நாகர்கோட் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடியில் சிக்கிய ரஹ்மத் என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications